CINEMA
“முத்த” நாயகனிடம் முத்தங்களை பரிசாக பெற்ற படக்குழுவினர்…
கமல் ஹாசன் படக்குழுவினர் அனைவருக்கும் தனி தனியாக முத்தம் கொடுத்த புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது.
“முத்தம்” என்றாலே நமக்கு நியாபகம் வருவது கமல் ஹாசன் தான். அவரது திரைப்படங்களில் சர்ச்சைக்குரிய முத்தக் காட்சி ஒன்று இடம் பெற்றே தீரும். 80களில் இருந்தே அவரது திரைப்படங்களில் முத்தக் காட்சி மிகவும் அழகாகவும் ரசிக்கும்படியும் இருக்கும். அவரது விஸ்வரூபம் திரைப்படம் வரை அது தொடர்ந்து.
இதனிடையே நேற்றைய முன் தினம் “விக்ரம்” திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில் உதயநிதி ஸ்டாலின், அனிருத், கமல் ஹாசன், லோகேஷ் கனகராஜ், அன்புச்செழியன் என பலரும் கலந்து கொண்டனர். அதில் “விக்ரம்” திரைப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றதற்காக பலருக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்தனர்.
உதயநிதி ஸ்டாலின் “விக்ரம்” திரைப்படத்தின் ஷேர் குறித்து ஓப்பனாக பேசினார். அடுத்து பேசிய கமல் ஹாசன் திரைப்படத்தின் வெற்றி என்பது ஒருவரின் வெற்றி அல்ல, அந்த வெற்றிக்கு பின் பலரும் இருக்கிறார்கள் என கூறினார். அதன் பின் அனிருத், லோகேஷ் கனகராஜ் இருவரும் தூங்கவே மாட்டார்கள், தினமும் அவர்கள் தூங்காமல் உழைப்பார்கள், தினமும் சிவராத்திரி தான் அவர்களுக்கு என புகழ்ந்து தள்ளினார்.
மேலும் பேசிய கமல், உதயநிதியிடம் அவரது தந்தை பட வெளியீட்டு வேலைகளை நிறுத்தி விடுமாறு அறிவுரை கூறினார் என கேள்விப்பட்டேன், நான் அவரிடம் சென்று அப்படி கூறாதீர்கள், உதயநிதி நல்ல திறமையான வேலைக்காரர் என சொன்னதாக கூறினார்.
இந்நிலையில் கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, அனிருத், உதயநிதி ஸ்டாலின் என பலருக்கும் முத்தங்களை பரிசாக அளித்தார். அப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“உலக நாயகன் ஆண்களுக்கும் முத்தம் கொடுக்காமல் விட மாட்டார் போல” என நெட்டிசன்கள் இதனை பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.