CINEMA
“மட்டன் கீமா, மட்டன் பிரியாணி”.. பத்திரிக்கையாளர்களுக்கு வேற லெவல் விருந்து வைத்த கமல் ஹாசன்..
“விக்ரம்” திரைப்படத்தின் வெற்றி விழாவில் கமல் ஹாசன் பத்திரிக்கையாளர்களுக்கு வேற லெவல் விருந்து ஒன்றை வைத்துள்ளார்.
“விக்ரம்” திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. அவ்விழாவில் கமல் ஹாசன், உதயநிதி ஸ்டாலின், அனிருத், அன்புச்செழியன், லோகேஷ் கனகராஜ் என பலரும் கலந்து கொண்டனர்.
அதில் “விக்ரம்” திரைப்படத்தின் வெற்றிக்கு பலருக்கும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் “விக்ரம்” திரைப்படத்தின் ஷேர் குறித்து ஓப்பனாக பேசினார்.
அடுத்து பேசிய கமல் ஹாசன் திரைப்படத்தின் வெற்றி என்பது ஒருவரின் வெற்றி அல்ல, அந்த வெற்றிக்கு பின் பலரும் இருக்கிறார்கள் என கூறினார். அதன் பின் அனிருத், லோகேஷ் கனகராஜ் இருவரும் தூங்கவே மாட்டார்கள், தினமும் அவர்கள் தூங்காமல் உழைப்பார்கள், தினமும் சிவராத்திரி தான் அவர்களுக்கு என புகழ்ந்து தள்ளினார்.
மேலும் பேசிய கமல், உதயநிதியிடம் அவரது தந்தை பட வெளியீட்டு வேலைகளை நிறுத்தி விடுமாறு அறிவுரை கூறினார் என கேள்விப்பட்டேன், நான் அவரிடம் சென்று அப்படி கூறாதீர்கள், உதயநிதி நல்ல திறமையான வேலைக்காரர் என சொன்னதாக கூறினார்.
இந்நிலையில் வெற்றி விழாவிற்கு வந்த பத்திரிக்கையாளர்களுக்கும் படக்குழுவினருக்கும் கமல் ஹாசன் மாபெரும் விருந்தை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விருந்தின் மெனு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதில் நாட்டுக் கோழி சூப், மட்டன் கீமா உருண்டை, பிச்சு போட்ட சிக்கன் வறுவல், மட்டன் சுக்கா, வஞ்சரம் ஃப்ரை, கொங்கு மட்டன் பிரியாணி, விருதுநகர் பன் புரோட்டா, பள்ளிப்பாளையம் சிக்கன், மதுரை மட்டன் கரி தோசை என இன்னும் பல்வேறு வித விதமான உணவு வகைகள் இடம்பெற்றிருந்தன. அப்புகைப்படம் இதோ…
