Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“எனக்கு கமல் ஹாசன் கொடுத்த Gift”?.. மனம் திறந்த அனிருத்

CINEMA

“எனக்கு கமல் ஹாசன் கொடுத்த Gift”?.. மனம் திறந்த அனிருத்

“விக்ரம்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் ஹாசன் அனிருத்திற்கு பரிசு தரவில்லையே என்ற கேள்விக்கு அனிருத் பதிலளித்துள்ளார்.

“விக்ரம்” திரைப்படம் தற்போது உலகளவில் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சனில் ரூ. 300 கோடியை தாண்டியுள்ளது. கமல் ஹாசனின் திரை வாழ்க்கையிலேயே “விக்ரம்” திரைப்படம் முக்கிய வெற்றித் திரைப்படமாக அறியப்படுகிறது.

இதனிடையே பல வருடங்கள் கழித்து கமல் ஹாசன் கேரியரில் “விக்ரம்” மாஸ் ஹிட் ஆன திரைப்படம் என்பதால் கமல் ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு ஒரு விலை உயர்ந்த காரையும் அவரது உதவி இயக்குனர்கள் 13 பேருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளையும் பரிசாக வழங்கினார்.

 அதனை தொடர்ந்து “விக்ரம்” திரைப்படத்தில் “ரோலக்ஸ்” கதாப்பாத்திரத்தில் கேமியோ ரோல் செய்த சூர்யாவிற்கு “ரோலக்ஸ்” வாட்ச்சையும் பரிசாக அளித்தார்.

“விக்ரம்” திரைப்படம் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் தாறுமாறான வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் கேரளாவில் “விக்ரம்” திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜும் இசையமைப்பாளர் அனிருத்தும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அங்கே நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்தனர். அப்போது ஒரு நிருபர் “கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு கார் பரிசாக வழங்கினார், உங்களுக்கு?” என நிருபர் கேள்வியை கேட்டு முடிப்பதற்குள்ளாகவே அனிருத் ஒரு நெகிழ்ச்சியான பதிலை அளித்தார்.

அதாவது “எனக்கு விக்ரம் படம் கொடுத்ததே Gift” என பதில் கூறினார். அப்போது அந்த அரங்கமே கரகோஷங்களில் அதிர்ந்தது.

“விக்ரம்” திரைப்படத்தின் வெற்றிக்கு சூர்யாவிற்கும், லோகேஷ் கனகராஜ்ஜிற்கு பரிசு அளித்த கமல் ஹாசன்,அனிருத்திற்கு பரிசளிக்கவில்லையே என பலர் பேசி வந்தனர். அதற்கெல்லாம் தற்போது அனிருத் இதன் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top