Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“கர்ணனாக மாறி வரும் கமல்”.. உதவி இயக்குனர்களுக்கு அள்ளி கொடுத்து சிவந்தன கரங்கள்..

CINEMA

“கர்ணனாக மாறி வரும் கமல்”.. உதவி இயக்குனர்களுக்கு அள்ளி கொடுத்து சிவந்தன கரங்கள்..

கமல் ஹாசன் “விக்ரம்” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உதவி இயக்குனர்களுக்கு என்ன பரிசுகள் வழங்கினார் தெரியுமா?

கமல் ஹாசன் “விக்ரம்” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு நெகிழ்ச்சி பொங்க தன் கைப்பட ஒரு கடிதம் எழுதினார்.

அக்கடிதத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ் “ “இது எனது லைஃப் டைம் செட்டில்மண்ட் லெட்டர்” என குறிப்பிட்டு “இந்த கடிதத்தை படித்த போது எனக்கு ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தையால் விவரிக்க முடியாது, நன்றி ஆண்டவரே” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து நேற்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக லோகேஷ் கனகராஜ்ஜிற்கு கமல் ஹாசன் லெக்சஸ் தயாரிப்பில் சொகுசு மாடல் கார் ஒன்றை பரிசாக அளித்திருந்தார். இதனை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ் “மிக்க நன்றி ஆண்டவரே” என குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து மேலும் ஆச்சரியத்தக்க விஷயம் ஒன்றை கமல் ஹாசன் செய்துள்ளார். அதாவது லோகேஷ் கனகராஜ்ஜுடன் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் 13 பேருக்கும் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார். கமல் ஹாசன் “விக்ரம்” திரைப்படம் வெற்றி அடைந்த குஷியில் கர்ணனாக மாறிவிட்டார் என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

“விக்ரம்” திரைப்படம் கமல் ஹாசன் கேரியரிலேயே மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்துள்ளது. உலகளவில் இத்திரைப்படம் ரூ. 170 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் மட்டுமே கூடிய விரைவில் ரூ. 100 கோடியை தொடும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Continue Reading

More in CINEMA

To Top