CINEMA
லோகேஷின் படத்தை இயக்கும் சிங்கம் நடிகர்..? என்னப்பா இது?
லோகேஷ் கனகராஜ்ஜின் “கைதி” திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கை யார் இயக்கப் போகிறார் தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “கைதி”. இத்திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. அதன் பின் லோகேஷிற்கு ஏறுமுகம் தான்.
அதன் பிறகு விஜய்யை வைத்து “மாஸ்டர்” திரைப்படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்து சமீபத்தில் கமல் ஹாசனை வைத்து இயக்கிய “விக்ரம்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆகி வேற லெவலில் கலெக்சனை அள்ளிக்கொண்டிருக்கிறது.
உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ. 410 கோடிகளுக்கும் மேல் கலெக்சன் அள்ளிக் கொண்டு வருகிறது “விக்ரம்”. இதனிடையே வெகு காலம் கழித்து தனது கேரியரில் ஒரு மாஸ் ஹிட் திரைப்படம் வெளிவந்ததால் கமல் ஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக அளித்தார்.
மேலும் லோகேஷின் உதவி இயக்குனர்களுக்கு பைக்குகளையும் பரிசாக அளித்தார். அதன் பின் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்தில் நடித்த சூர்யாவிற்கு “ரோலக்ஸ்” வாட்சையும் பரிசாக அளித்தார்.
இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கிய “கைதி” திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல் வந்தது. அதில் கார்த்தி கதாப்பாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிப்பதாக இருக்கிறார். அதே போல் நரேன் கதாப்பாத்திரத்தில் தபு நடிப்பதாக இருக்கிறாராம்.
இத்திரைப்படத்திற்கு “போலா” என பெயர் வைத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தை அஜய் தேவ்கனே இயக்குகிறாராம். அஜய் தேவ்கன் இதற்கு முன் “ரன்வே 34” என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இத்திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் தேதி வெளிவரும் என கூறப்படுகிறது.