CINEMA
“கடல் ராசா நான், கடல் ராசா நான்”.. ஜெயம் ரவி திரைப்படத்தின் அசத்தல் டீசர்
ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் “அகிலன்” திரைப்படத்தின் அசத்தலான டீசர் வெளிவந்துள்ளது.
வெவ்வேறு நடிகர்களின் ரசிகர்களுக்கும் ஜெயம் ரவியை பிடிக்கும் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வருபவர்.
தமிழ் சினிமாவில் Family Audience-ன் செல்லப் பிள்ளையாக விளங்கி வருபவரும் ஜெயம் ரவி தான். இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் தான் அமையும்.
சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த “கோமாளி” திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. அதன் பின் வெளியான “பூமி” திரைப்படம் அந்த அளவிற்கு எடுபடவில்லை. மேலும் மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரமான அருள்மொழி வர்மன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
இதனிடையே ஜெயம் ரவி “அகிலன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாக சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வந்தது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்று வெளிவந்தது.
இந்நிலையில் தற்போது “அகிலன்” திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் வெளிவந்துள்ளது. டீசரை பார்க்கும்போது இத்திரைப்படம் துறைமுகம் யார் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும் என ஒரு போட்டி நிகழ்வது போலவும் அந்த போட்டியில் ஜெயம் ரவி தன்னுடைய இடத்தை தக்கவைத்துக் கொள்வாரா? என்பதும் தான் கதையின் மையக்கருவாக இருக்கும் என வியூகிக்க முடிகிறது.
இத்திரைப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் பிரியா பவானி ஷங்கர் இத்திரைப்படத்தில் போலீஸாக வருகிறார். இவர்களுடன் சிராக் ஜானி, ஹரீஷ் பெராடி, ஹரீஷ் உத்தமன், தருண் அரோரா, மதுசூதனன், ராவ் போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை என். கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ளார். சாம் சி எஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.