CINEMA
மறைந்த நடிகை ஸ்ரீதேவி தனது குட்டி மகள் ஜான்வியுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம்..
மறைந்த நடிகை ஸ்ரீதேவி தனது குட்டி மகள் ஜான்வி கபூருடன் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படத்தை பாருங்கள்.
தமிழின் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஸ்ரீதேவி ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஆகிய பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த “16 வயதினிலே” திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டார்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்த ஸ்ரீதேவி கடந்த 1996 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். போனி கபூர் ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொள்ளும் முன்பு மோனா சௌரி கபூர் என்ற பெண்ணை (இவரும் தயாரிப்பாளர் தான்) திருமணம் செய்துகொண்டார். அதன் பின் இருவரும் பிரிந்தனர். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள். அதில் ஒருவர் தான் பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூர்.
அதன் பின் தான் போனி கபூர், ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொண்டார். போனிகபூர்-ஸ்ரீதேவி தம்பதியினருக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் பிறந்தனர். இதில் ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்கிறார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்ரீதேவி எதிர்பாராவிதமாக துபாயில் அவர் தங்கியிருந்த ஹோட்டல் ரூமில் இறந்து கிடந்தார். இந்த நிலையில் இன்று ஸ்ரீதேவியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜான்வி கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தான் குழந்தையாக இருந்தபோது தனது தாய் ஸ்ரீதேவியுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் “இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா. நீங்கள் என்றுமே என் நினைவில் உள்ளீர்கள். லவ் யூ” என குறிப்பிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
