CINEMA
வெளியானது “ஜெயிலர்” படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்..
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.
சமீபத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் நடைபெற்றது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஆலிம் ஹக்கிம் என்ற சிகையலங்கார கலைஞர் ரஜினியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தி வெளியிட்டுள்ளார்.
அதில் “ நமது ஒரே ராஜா ரஜினிகாந்துடன் பணியாற்றும் ஒரு அற்புதமான நாள் இது” என குறிப்பிட்டுள்ளார். தற்போது இப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
An innovative day at work with our one & only King 👑 Sir RAJNIKANTH 👑❤️#rajnikanth #king #superstar #indianfilmindustry #chennai #aalimhakim #hakimsaalim #actorslife #viral #trending #trendingpost #innovativeday #workmode pic.twitter.com/F5pGl6Cgq0
— Aalim Hakim (@AalimHakim) July 24, 2022
“பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் ரஜினியை வைத்து இயக்குவதாக அறிவிப்பு வெளிவந்தது. “பீஸ்ட்” திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், ரசிகர்களுக்கு அத்திரைப்படம் திருப்தி அளிக்கவில்லை.
ஆதலால் விஜய் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் இயக்குனர் நெல்சனை கேலி செய்து பல மீம்களை இறக்கி வந்தனர்.
“பீஸ்ட்” திரைப்படத்திற்கு நெகட்டிவ் ரிவ்யூக்களே அதிகம் வந்ததால் ரஜினி நெல்சன் திரைப்படத்தில் இருந்து விலகி விடுவார் என வதந்தி பரவியது. ஆனால் ரஜினி-நெல்சன் கூட்டணி கன்ஃபார்ம் ஆனது.
இதனை தொடர்ந்து “ஜெயிலர்” திரைப்படத்தின் Pre-production பணிகள் தொடங்கின. திரைக்கதையில் கூடுதல் பலம் சேர்க்க இயக்குனர் நெல்சனுடன் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது.
அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளிவந்தது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்து மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.
இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சிறைச்சாலையில் நடப்பது போல் எடுக்கப்படுகிறது என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.