Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு எங்கே நடக்கிறது தெரியுமா?

CINEMA

“ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு எங்கே நடக்கிறது தெரியுமா?

“ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்தான ஒரு சுவாரசியமான தகவல்  இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. “பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.

“பீஸ்ட்” திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்த நிலையில் இதில் திரைக்கதையை சற்று மேம்படுத்த நெல்சனுடன் கே எஸ் ரவிக்குமார் இணைந்து பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த தகவல் குறித்த உண்மை தன்மை தெரியவில்லை.

“ஜெயிலர்” திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. மேலும் பிரியங்கா மோகன், ஐஸ்வர்யா ராய், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்த்-ரம்யா கிருஷ்ணன் காம்போவை பற்றி நாம் கூறத்தேவையே இல்லை. “படையப்பா” திரைப்படத்தில் நீலாம்பரியாக வந்து மிரட்டிவிட்டு போனவர் ரம்யா கிருஷ்ணன். “படையப்பா” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் “ஜெயிலர்” திரைப்படத்தின் மூலம் ரஜினியுடன் இணைந்துள்ளார்.

யோகி பாபு தற்போது விஜய்யின் “வாரிசு” திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கு முன் “தர்பார்” திரைப்படத்தில் யோகி பாபு ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார்.

மலையாளத்தின் முன்னணி நடிகரான விநாயகன் இதற்கு முன் தமிழில் “திமிரு”, “மரியான்”, “சிலம்பாட்டம்”, “சிறுத்தை” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் “ஜெயிலர்” திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. வசந்த் ரவி இதற்கு முன் “தரமணி”, “ராக்கி” ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையின் எண்ணூர் பகுதியில் நடைபெற்று வருவதாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top