CINEMA
“ஜெயிலர்” திரைப்படம் ரிலீஸ் ஆக இவ்வளவு நாள் ஆகுமா??
“ஜெயிலர்” திரைப்படம் ரிலீஸ் குறித்த ஒரு புதிய தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
“பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் ரஜினியை வைத்து இயக்குவதாக அறிவிப்பு வெளிவந்தது. “பீஸ்ட்” திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், ரசிகர்களுக்கு அத்திரைப்படம் திருப்தி அளிக்கவில்லை.
ஆதலால் விஜய் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து நெட்டிசன்கள் இயக்குனர் நெல்சனை கேலி செய்து பல மீம்களை இறக்கி வந்தனர்.
“பீஸ்ட்” திரைப்படத்திற்கு நெகட்டிவ் ரிவ்யூக்களே அதிகம் வந்ததால் ரஜினி நெல்சன் திரைப்படத்தில் இருந்து விலகி விடுவார் என வதந்தி பரவியது. ஆனால் ரஜினி-நெல்சன் கூட்டணி கன்ஃபார்ம் ஆனது.
இதனை தொடர்ந்து “ஜெயிலர்” திரைப்படத்தின் Pre-production பணிகள் தொடங்கின. திரைக்கதையில் கூடுதல் பலம் சேர்க்க இயக்குனர் நெல்சனுடன் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளிவந்தது. அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாகவும் அறிவிப்பு வெளிவந்தது.
சமீபத்தில் இத்திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது. போஸ்டரில் ரத்தக் கரையுடன் ஒரு கத்தி தொங்குகிறது. அதன் பின்னணி ஒரு பெரிய சிறைச்சாலையாக தெரிகிறது. இதனை கொண்டு ஒரு பக்கா ஆக்சன் திரைப்படமாக “ஜெயிலர்” திரைப்படம் அமையப்போவதாக வியூகிக்க முடிகிறது.
இந்நிலையில் “ஜெயிலர்” திரைப்படத்தின் வெளியீடு குறித்த ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அதாவது “ஜெயிலர்” திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளிவரும் என கூறப்படுகிறது. “இன்னும் இவ்வளவு மாதங்கள் காத்திருக்க வேண்டுமா?” என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
