CINEMA
இவங்க எல்லாரும் தான் ஜெயிலர் படத்துல நடிக்கிறாங்க… கன்ஃபார்ம்.. படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ வீடியோ
“ஜெயிலர்” திரைப்படத்தில் நடிப்பவர்கள் குறித்தான அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படக்குழு “ஜெயிலர்” திரைப்படத்தில் நடிப்பவர்கள் குறித்தான அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்டுள்ளது.
“ஜெயிலர்” திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். ரஜினிகாந்த்-ரம்யா கிருஷ்ணன் காம்போவை பற்றி நாம் கூறத்தேவையே இல்லை. “படையப்பா” திரைப்படத்தில் நீலாம்பரியாக வந்து மிரட்டிவிட்டு போனவர் ரம்யா கிருஷ்ணன். “படையப்பா” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் “ஜெயிலர்” திரைப்படத்தின் மூலம் ரஜினியுடன் இணைந்துள்ளார்.
அடுத்ததாக ஜெயிலர் திரைப்படத்தில் யோகி பாபு நடிக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது விஜய்யின் “வாரிசு” திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதற்கு முன் “தர்பார்” திரைப்படத்தில் யோகி பாபு ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார்.
இவருக்கு அடுத்ததாக மலையாளத்தின் முன்னணி நடிகர் விநாயகன் நடிக்கிறார். இவர் இத்திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இவர் இதற்கு முன் தமிழில் “திமிரு”, “மரியான்”, “சிலம்பாட்டம்”, “சிறுத்தை” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அடுத்ததாக நடிகர் வசந்த் ரவி நடிக்கிறார். இவர் “தரமணி”, “ராக்கி” ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
“ஜெயிலர்” திரைப்படக்குழு அதிகாரப்பூர்வமாக இந்த நால்வரின் வரவை அறிவித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“ஜெயிலர்” திரைப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். சன் பிக்சர்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது.
The cast of #Jailer💥
Welcome on board @meramyakrishnan @iYogiBabu @iamvasanthravi #Vinayakan@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/Umo5DevjWy— Sun Pictures (@sunpictures) August 24, 2022