Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

திரையரங்குகளில் வெளியாகிறது ஜெய் பீம்… சூர்யா பர்த்டே ஸ்பெஷல்!

CINEMA

திரையரங்குகளில் வெளியாகிறது ஜெய் பீம்… சூர்யா பர்த்டே ஸ்பெஷல்!

சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு ஜெய் பீம், சூரரை போற்று ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது என தகவல்.

நடிகர் சூர்யா வருகிற 23 ஆம் தேதி தனது 47 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு வருகிற 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சூர்யா நடித்த “சூரரை போற்று”, “ஜெய் பீம்” ஆகிய திரைப்படங்கள் சென்னையில் சில திரையரங்குகளில் திரையிடப்படுவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

“சூரரை போற்று”, “ஜெய் பீம்” ஆகிய திரைப்படங்கள் கொரோனா தொற்று காரணமாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களும் பெரிதளவில் மக்களால் ரசிக்கப்பட்டது.

“சூரரை போற்று” திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இத்திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார். 2D என்டெர்ட்யின்மென்ட் சார்பாக சூர்யா-ஜோதிகா ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்தனர்.

அதே போல் “ஜெய் பீம்” திரைப்படம் அமேசான் பிரைமில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இத்திரைப்படத்தை தா சே ஞானவேல் இயக்கியிருந்தார். இருளர் சமூகத்தின் மீது ஆதிக்கவாதிகளால் கட்டவிழ்க்கப்படும் வன்முறையை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றது. மேலும் சில சர்வதேச விருதுகளையும் வாங்கியது. திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் சர்ச்சையையும் உண்டு செய்தது.

இந்நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களும் வருகிற சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு திரையரங்குகளில் திரையிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top