Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

தமிழகத்தையே உலுக்கிய அந்த சம்பவம்.. ஜெய் பீம் இயக்குனரின் அடுத்த படம் இது தான்..

CINEMA

தமிழகத்தையே உலுக்கிய அந்த சம்பவம்.. ஜெய் பீம் இயக்குனரின் அடுத்த படம் இது தான்..

தமிழகத்தையே உலுக்கிய அந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு “ஜெய் பீம்” இயக்குனர் தா செ ஞானவேல் தனது அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளார்.

தா சே ஞானவேல் இயக்கிய “ஜெய் பீம்” திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. செங்கேணி-ராஜாகண்ணு ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், இருளர் சமுதாயத்தின் மீது ஆதிக்க சக்திகளின் தாக்குதலை வெளிச்சம் போட்டு காட்டியது.

“ஜெய் பீம்” திரைப்படம் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் பேசப்பட்டது. இத்திரைப்படத்திற்கு சில சர்வதேச விருதுகளும் கிடைத்தது. சூர்யா மிகவும் கச்சிதமான வழக்கறிஞராக நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.  மேலும் “ஜெய் பீம்” திரைப்படம் பல சர்ச்சைகளையும் கிளப்பியது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தாக்கி இத்திரைப்படம் எடுக்கப்பட்டதாக வழக்குகள் பாய்ந்தன.

இந்நிலையில் தா சே ஞானவேல் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த ஒரு சுவாரசியமான அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதாவது தமிழகத்தையே உலுக்கிய ஜீவஜோதியின் வழக்கை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஹோட்டல் சரவணா பவன் உரிமையாளர் ராஜகோபால் தனது ஊழியரின் மனைவியான ஜீவஜோதியை திருமணம் செய்துகொள்ளுமாறு தொல்லை கொடுத்த விவகாரத்தில் ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து ராஜகோபாலின் மேல் வழக்கு பாய்ந்தது. அந்த வழக்கில் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் ராஜகோபால் ஆயுள் தண்டனை கைதியாகவே இறந்துப் போனார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

பணமும், புகழும் பெற்ற ஒரு தொழிலதிபர் பெண்ணாசையால் எப்படி வீழ்ந்தார் என்பதே இத்திரைப்படத்தின் மையக்கருத்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

More in CINEMA

To Top