Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“நெஜமாவே இது உலக சினிமா தான் போல”….

CINEMA

“நெஜமாவே இது உலக சினிமா தான் போல”….

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கிய “இரவின் நிழல்” திரைப்படத்தின் உலகத் தரமான டிரைலர் வெளிவந்துள்ளது.

பார்த்திபன் தமிழ் திரைப்பட உலகில் எப்போதும் ஒரு புதுமை விரும்பி. அவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்திலும் வித்தியாசமான கதை களம் அமைந்திருக்கும். அவர் திரைப்படம் மட்டுமல்லாது அவர் ஒரு மேடையில் பேசும் போதே அவர் வெளிப்படுத்தும் வார்த்தைகள் புதுமையானதாக இருக்கும்.

அவரது நிஜ வாழ்க்கையில் அவர் மேற்கொள்ளும் செயல்களும் கூட அப்படித்தான். இதற்கு உதாரணமாக சமீபத்தில் “இரவின் நிழல்” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கோபப்பட்டு மைக்கை தூக்கி எறிந்து அந்த மைக் ரோபோ ஷங்கரின் மேல் விழுந்தது. அந்த விஷயம் பெரும் சர்ச்சையாக, பார்த்திபன் ரோபோ ஷங்கரிடம் மன்னிப்பு கேட்டார். அதுவும் எப்படி என்றால் மிகவும் வித்தியாசமான முறையாக தனித்துவமான வாசகங்களுடன் மன்னிப்பு கேட்டார்.

அதாவது ரோபோ ஷங்கரை நேரில் சந்தித்து முத்தம் இட்டவாறும் மைக்கை கையில் பிடித்தவாறும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அதில் “மைக்கை கண்டுபிடித்தவர் எமிலி பெர்லினர், மைக்கை கேட்ச் பிடிக்காமல் விட்டவர் ரோபோ ஷங்கர், மைக்கால் பிடிபட்டவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், முடிவில் முத்தமிட்டவர்” என நகைச்சுவையாக குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து “இரவின் நிழல்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 24 ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்நிலையில் “இரவின் நிழல்” திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளிவந்துள்ளது.

இதில் ஒவ்வொரு காட்சியும் உலகத் தரமாக எடுக்கப்பட்டிருக்கிறது. வித்தியாசமான கதைக்களத்துடன் தனித்துவமாக தெரிகிறது. இந்திய சினிமாவின் மைல் கல் என ரசிகர்கள் டிரைலரை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

“இரவின் நிழல்” திரைப்படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. கேன்ஸ் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

                                   

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top