CINEMA
“உங்க கைய காலா நினைச்சி கேட்டுக்குறேன்“ வடிவேல் பாணியில் வெளிவந்த இரவின் நிழல் போஸ்டர்..
“இரவின் நிழல்” திரைப்படத்தின் வெளியீடு குறித்தான முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.
பார்த்திபன் தமிழ் திரைப்பட உலகில் எப்போதும் ஒரு புதுமை விரும்பி. அவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்திலும் வித்தியாசமான கதை களம் அமைந்திருக்கும். அவர் திரைப்படம் மட்டுமல்லாது அவர் ஒரு மேடையில் பேசும் போதே அவர் வெளிப்படுத்தும் வார்த்தைகள் புதுமையானதாக இருக்கும்.
அவரது நிஜ வாழ்க்கையில் அவர் மேற்கொள்ளும் செயல்களும் கூட அப்படித்தான். இதற்கு உதாரணமாக சமீபத்தில் “இரவின் நிழல்” திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கோபப்பட்டு மைக்கை தூக்கி எறிந்து அந்த மைக் ரோபோ ஷங்கரின் மேல் விழுந்தது. அந்த விஷயம் பெரும் சர்ச்சையாக, பார்த்திபன் ரோபோ ஷங்கரிடம் மன்னிப்பு கேட்டார். அதுவும் எப்படி என்றால் மிகவும் வித்தியாசமான முறையாக தனித்துவமான வாசகங்களுடன் மன்னிப்பு கேட்டார்.
அதாவது ரோபோ ஷங்கரை நேரில் சந்தித்து முத்தம் இட்டவாறும் மைக்கை கையில் பிடித்தவாறும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அதில் “மைக்கை கண்டுபிடித்தவர் எமிலி பெர்லினர், மைக்கை கேட்ச் பிடிக்காமல் விட்டவர் ரோபோ ஷங்கர், மைக்கால் பிடிபட்டவர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், முடிவில் முத்தமிட்டவர்” என நகைச்சுவையாக குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டிருந்தார்.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீடு குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது வருகிற ஜூன் மாதம் 24 ஆம் தேதி “இரவின் நிழல்” திரைப்படம் வெளிவரவுள்ளது. வெளியீட்டை அறிவிக்கும் விதமாக போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் ரோபோ ஷங்கர் சாமியார் போல் வேடமிட்டு கையை தூக்கி ஆசி வழங்குகிறார். அவருக்கு வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஒருவரும் சேவை செய்கின்றனர். ரோபோ ஷங்கருக்கு பின்னே பார்த்திபனும் ஆசி வழங்குவது போல் நிற்கிறார்.
மேலும் அப்போஸ்டரில் “இது போன்ற முதன் முயற்சிக்கு முதல் டிக்கெட் வாங்கும் கைகளை நான் கால்களாய் நினைத்து வணங்குகிறேன்!” என்று எழுதி அதற்கு கீழ் வடிவேல் ரசிகர் என குறிப்பிட்டுள்ளது. “இரவின் நிழல்” திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் நான் லீனியர் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.