Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“இந்தியன் 2 சர்ப்ரைஸை உடைத்த உதயநிதி”.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

CINEMA

“இந்தியன் 2 சர்ப்ரைஸை உடைத்த உதயநிதி”.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

“இந்தியன் 2” திரைப்படம் குறித்த சர்ப்ரைஸை உடைத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் தள்ளியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்

கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த “இந்தியன் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு மும்முரமாக நடைபெற்று வந்தது. ஆனால் துர்திஷ்டவசமாக படப்பிடிப்பில் நடந்த விபத்தில் மூவர் பலியான செய்தி திரைத் துறையையே சோகத்தில் ஆழ்த்தியது.

அதனை தொடர்ந்து திரைப்படத்தின் படப்பிடிப்பு நின்று போனது. அதன் பின் எப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர். ஆனால் அதன் பின் கமல் ஹாசன் “விக்ரம்” திரைப்படத்திலும் ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் திரைப்படத்திலும் பிசியாகி விட்டனர். ஆதலால் “இந்தியன் 2” படப்பிடிப்பு அப்படியே முடங்கியது.

இதனை தொடர்ந்து சமீபத்தில் “விக்ரம்” திரைப்படத்திற்கான பேட்டி ஒன்றில் கமல் ஹாசனிடம் “இந்தியன் 2 மீண்டும் தொடங்குமா?” என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கமல் ஹாசன் “ஷங்கர் தெலுங்கு திரைப்படத்தில் பிசியாக இருக்கிறார். அதன் பிறகு இந்தியன் 2 திரைப்படம் விரைவில் தொடங்க உள்ளோம்” என கூறினார்.

இதனை தொடர்ந்து நேற்று  “டான்” திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், சூரி மற்றும் படக்குழுவை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் “லைக்கா நிறுவனத்திடம் சமீபத்தில் பேசினேன். இந்தியன் 2 விரைவில் தொடங்க உள்ளோம்” என்று கூறி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் தள்ளினார்.

“விக்ரம்” திரைப்படம் சென்ற வாரம் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது. ரசிகர்கள் திரைப்படத்தை ஆரவாரமாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் சர்ப்ரைஸை உடைத்ததால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top