CINEMA
இசைஞானியை கௌரவித்த மத்திய அரசு.. ரசிகர்கள் உற்சாகம்
இசைஞானி இளையராஜா நியமன எம் பி ஆக நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இசைஞானி இளையராஜா தமிழ் மக்களின் உணர்வுகளில் கலந்த இசையமைப்பாளர். அவரின் பாடல்கள் காலத்துக்கும் அழியாதவை. மூன்று தலைமுறைகளாக ரசிகர்களின் ஆஸ்தான இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர்.
தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர்களுக்கு எல்லாம் ஒரு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். மூன்று தலைமுறையை கடந்தும் இவரது பாடல்கள் நிலைக்க கூடியவை. அந்த அளவுக்கு மக்களோடு மக்களாக கலந்திருக்கிறது இவரது இசை. தனது 79 வயதிலும் இவரது இசையில் இளமையான ராகங்கள் அப்படியே உள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு இளையராஜாவை கௌரவிக்கும் வகையில் பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது. அதே போல் கடந்த 2018 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டது.
சமீபத்தில் வெளியான “அம்பேத்கர் அண்டு மோடி” என்ற ஆங்கில புத்தகத்திற்கு முன்னுரை எழுதிய இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புகழ்ந்து எழுதினார். இதனால் பெரும் சர்ச்சையும் வெடித்தது.
இந்நிலையில் தற்போது இளையராஜா ராஜ்யசபாவில் நியமன எம் பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இளையராஜா நியமன எம் பி ஆக நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பலரும் இளையராஜாவுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இளையராஜாவை தொடர்ந்து “பாகுபலி” திரைப்படத்தின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் நியமன எம் பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல் தடகள வீராங்கனை பி டி உஷாவும் நியமன எம் பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
