CINEMA
“இசைஞானி 80”… ஆயுள் விருத்திக்கு ராஜா செய்த பூஜை..
இசைஞானி இளையராஜா 80 வயதை நெருங்கி உள்ள நிலையில் மயிலாடுதுறை கோவிலில் ஆயுள் விருத்தி ஹோம பூஜை ஒன்றை நடத்தியுள்ளார்.
இசைஞானி இளையராஜா கடந்த மூன்று தலைமுறைகளாக தமிழ் சினிமா இசையுலகில் ராஜாவாக திகழ்ந்து வருபவர். இன்றும் அதே இளமை துள்ளலோடு இவரது பாடல்களை அள்ளி தந்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் ஒவ்வொரு முன்னணி இசையமைப்பாளர்களுக்கும் இளையராஜா பெரும் முன்னோடியாக திகழ்பவர். 80’s kid-களில் இருந்து 2k kid-கள் வரை இவரது இசை எந்த தடையும் இல்லாமல் ஆட்கொண்டு வருகிறது.
சமீபத்தில் வெளியான “சைக்கோ” திரைப்படத்தில் இடம்பெற்ற “உன்ன நினைச்சி” பாடல் ஒன்றே போதும். அவர் தற்போதைய இளைஞர்களின் Pulse-ஐ எப்படி புரிந்து கொண்டு தன்னை அப்டேட் செய்துள்ளார் என்று தெரிந்துகொள்ள.
மேலும் தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் “விடுதலை” திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
அது மட்டும் அல்லாது சமீபத்தில் கூட நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவந்த “ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்” என்ற வெப் சீரிஸில் தீம் மியூசிக்கை இசையமைத்தது அனைவரையும் “ஓ” போட வைத்தது.
வெப் சீரீஸில் இடம்பெற்ற அதே பாணியில் புது வித நேட்டிவிட்டி Touch-களை கோர்த்து அவர் உருவாக்கிய தீம் மியூசிக் பரவலாக லைக்ஸ்களை அள்ளியது. இந்நிலையில் வருகிற ஜூன் மாதம் இளையராஜா தனது 80 வயதை நெருங்க உள்ளார்.
இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஷ்வரர் கோவிலில் இளையராஜா ஆயுள் விருத்தி ஹோம பூஜை ஒன்றை நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அப்பூஜையில் இயக்குனர் பாரதிராஜா, கங்கை அமரன், பிரேம்ஜி அமரன் ஆகியோர் பங்கு பெற்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.