CINEMA
ரசிகரின் காலில் விழுந்து கும்பிட்ட ஹிரித்திக் ரோஷன்… என்ன மனுஷன்யா!!
ஹிரித்திக் ரோஷன் தனது ரசிகரின் காலில் விழுந்து கும்பிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஹிரித்திக் ரோஷன் பாலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த “கிரிஷ்”, “தூம் 2”, “ஜோதா அக்பர்”, “அக்னி பாத்”. “சூப்பர் 30” ஆகிய திரைப்படங்கள் பிரபலமாக பேசப்பட்ட திரைப்பங்கள் ஆகும். இவர் குழந்தை நட்சத்திரமாக பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவரது தந்தை ராகேஷ் ரோஷன் பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஆவார். ராகேஷ் ரோஷன் சிறந்த நடிகரும் கூட. மேலும் பல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். ஹிரித்திக் ரோஷன் சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர். இவரது நடனத்துக்கென்றே தனி ரசிகர் கூட்டம் ஒன்று உண்டு.
இந்த நிலையில் “விக்ரம் வேதா” திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி ரோலில் ஹிரித்திக் ரோஷன் நடித்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. டீசர் வெளியீட்டை முன்னிட்டு தனது ரசிகர்களை சந்தித்தார் ஹிரித்திக் ரோஷன்.
அப்போது ஒரு ரசிகர் மேடையேறி ஹிரித்திக் ரோஷனின் காலில் விழுந்தார். அதனை தொடர்ந்து மறு வினாடியே ஹிரித்திக் ரோஷன் அந்த ரசிகரின் காலில் விழுந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Hrithik Roshan touching his fan feet.😭❤ Such a gem of a person he is @iHrithik . There is really no like him.❤ #VikramVedha pic.twitter.com/DAkgijMMgE
— अमित ™ (@HRxfan_boy) August 27, 2022
“விக்ரம் வேதா” ஹிந்தி ரீமேக்கில் மாதவன் கதாப்பாத்திரத்தில் செயிஃப் அலிகானும் விஜய் சேதுபதி கதாப்பாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷனும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தையும் புஷ்கர்-காயத்ரி இணையர்களே இயக்கி உள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த “விக்ரம் வேதா” திரைப்படம் வித்தியாசமான கதை சொல்லலை கையாண்டு பலரையும் “ஓ” போட வைத்தது குறிப்பிடத்தக்கது.