CINEMA
#HBDSuriya… சூர்யா பிறந்த நாளுக்கு விஜய் டிவி வெளியிட்ட சிறப்பு வீடியோ..
சூர்யா பிறந்த நாளான இன்று பிறந்த நாள் வாழ்த்துகளை தெவிக்கும் வகையில் விஜய் டிவி சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யா இன்று தனது 47 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். நேற்று இரவில் இருந்து ரசிகர்கள் சூர்யாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சூர்யா தற்போது பாலா இயக்கும் “வணங்கான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் மீனவனாக நடித்திருக்கிறார் என கூறப்படுகிறது.
சூர்யா சமீபத்தில் “விக்ரம்”, “ராக்கெட்ரி” ஆகிய திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். குறிப்பாக “விக்ரம்” திரைப்படத்தின் கிளைமேக்ஸில் “ரோலக்ஸ்” என்ற கதாப்பாத்திரத்தில் வந்த சூர்யா தனது மாஸ் நடிப்பால் ரசிகர்களை கொள்ளை கொண்டு போனார்.
சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து 2D என்டெர்டெயின்மென்ட் சார்பாக பல திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது. சமீபத்தில் கூட சாய் பல்லவி நடித்த “கார்கி” திரைப்படத்தை வெளியிட்டார்.
மேலும் தற்போது பாலிவுட்டில் “சூரரைப் போற்று” திரைப்படத்தின் ரீமேக்கை தயாரித்து வருகிறார். இதில் அக்சய் குமார் நடித்து வருகிறார். இதில் சூர்யா கேமியோ ரோலில் வருவதாக கூறப்படுகிறது.
மேலும் சூர்யா நடித்த “சூரரைப் போற்று” திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூர்யா ஆஸ்கர் கமிட்டியின் முதல் தமிழ் ஜூரியாகவும் இணைய உள்ளார்.
இந்நிலையில் இன்று சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு ஒரு சிறப்பு வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.