CINEMA
#HBDSOUTHQUEENTRISHA த்ரிஷா பிறந்தநாளில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்..
நடிகை த்ரிஷா பிறந்தநாளான இன்று #HBDSOUTHQUEENTRISHA என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.
90’s kid-களின் கனவு கன்னி த்ரிஷாவுக்கு இன்று பிறந்தநாள். இன்றோடு அவருக்கு 39 வயது நிறைவடைகிறது என்றால் நம்மால் நம்பமுடிகிறதா?. “சாமி” திரைப்படத்தில் பார்த்த அதே இளமை, நடிப்பு, நடை, உடை என அனைத்தும் இப்போதும் அவரிடம் குடிகொண்டு தான் இருக்கிறது.
“என்றென்றும் புன்னகை” திரைப்படத்தில் இடம்பெற்ற “என்னை சாய்த்தாலே” பாடலில் பனி விழும் சாரலில் மெல்லமாய் நடந்து வந்த போது அவர் மேல் விழுந்த பனியும் உருகிருக்கும்.
“96” திரைப்படத்தில் “ஜானு” வை நம்மால் மறக்கமுடியுமா? எத்தனை காதல், எத்தனை ஏக்கம், எத்தனை அழுகை, எத்தனை ஏமாற்றத்தை அந்த கதாப்பாத்திரத்தில் தேக்கி வைத்திருப்பார். அதில் அவர் அணிந்திருந்த மஞ்சள் உடை டிரெண்டாக மாறியதை நம்மால் மறக்கமுடியுமா?
“கில்லி” திரைப்படத்தில் “அப்படி போடு” பாடலின் குத்தாட்டத்திற்கு தமிழ்நாடே குத்தாட்டம் போட்டது. “ஆதி” திரைப்படத்தில் “என்னை கொஞ்ச வா மழையே” பாடலில் அவருடன் சேர்ந்து நாமும் நனைந்தோமே.
“பீமா” திரைப்படத்தின் “எனதுயிரே” பாடலில் அவர் கண்களால் பேசிய காதலில் நாமும் நெகிழ்ந்து போனோமே. “ஜீ” திரைப்படத்தின் “டிங் டாங் கோவில் மணி” த்ரிஷா உடுத்திய சேலை நம்மையும் வருடிச் சென்றதல்லவா?
எந்த கதாப்பாத்திரத்தையும் கச்சிதமாக நடிக்க கூடியவர் என பலராலும் பாராட்டப்பட்டவர் த்ரிஷா. இந்நிலையில் இன்று அவரது பிறந்த நாளில் #HBDSOUTHQUEENTRISHA என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. அதே போல் அவரது ரசிகர்கள் பலர் அவருக்காக ஒரு “Common DP” ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த “Common DP” சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. த்ரிஷா பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வருகிற பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் “குந்தவை” கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அந்த கதாப்பாத்திரத்தின் “First look” வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
