Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

ஹரீஷ் கல்யாண் இனி Chocolate boy கிடையாதாம்??

CINEMA

ஹரீஷ் கல்யாண் இனி Chocolate boy கிடையாதாம்??

ஹரீஷ் கல்யாண் ஆக்சன் அவதாரம் எடுத்த புதிய திரைப்படத்தின் வெறித்தனமாக கிளிம்ப்ஸ் வெளிவந்துள்ளது.

தமிழ் திரையுலகில் இளம் பெண்களின் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வருபவர் ஹரீஷ் கல்யாண். இவர் தமிழ் சினிமா உலகில் “சிந்து சமவெளி” திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் தமிழில் “அரிது அரிது”. “சட்டப்படி குற்றம்”, “சந்தமாமா”, “பொறியாளன்”, “வில் அம்பு” என பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சிக்குள் நுழைந்தார்.

பிக் பாஸ் சீசன் 1-ல் சிறப்பாக விளையாடிய அவர் , செகண்ட் ரன்னர் அப்பாக உயர்ந்தார். அதன் பின் பிக் பாஸில் சக கன்டெஸ்டன்ட்டாக கலந்து கொண்ட ரைஸாவுடன் இணைந்து “பியார் பிரேமா காதல்” என்ற திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படம் தான் ஹரீஷ் கல்யாணிற்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

அதன் பின் அவருக்கு ஏறுமுகம் தான். ‘பியார் பிரேமா காதல்” திரைப்படத்தின் மூலம் இளம் பெண்களின் மனதையும் கொள்ளை கொண்டு போனார். அவர்களின் மத்தியில் ஒரு சாக்லேட் பாயாகவும் வலம் வர தொடங்கினார்.

“பியார் பிரேம காதல்” திரைப்படத்தை தொடர்ந்து “இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்”, “தனுசு ராசி நேயர்களே”, “தாராள பிரபு”, “கசட தபற”, ஓ மனப்பெண்ணே” ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதனிடையே “ஜெர்சி”, “காதலி” போன்ற தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய ரூட்டை மாற்றி ஒரு ஆக்சன் ஹீரோவாக “டீசல்” திரைப்படத்தில் களமிறங்கி இருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்சன் பிளாக் திரைப்படமாக உருவாகி உள்ள இத்திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகி இணையத்தில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. ‘ஹரீஷ் கல்யாண் ஆக்சன் ஹீரோவா?” என பல ரசிகர்களும் “ஓ” போடும் வகையில் கிளிம்ப்ஸ் அமைந்துள்ளது.

                     

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top