CINEMA
“ஹரி is back”.. விறுவிறுப்பான “யானை” டிரைலர்
இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான “யானை” திரைப்படத்தின் விறுவிறுப்பான டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். இவர் “தமிழ்”, “சாமி”, “கோவில்:, “அருள்”, “அய்யா”, “அறு”, “தாமிரபரணி”, “வேல்”, “சேவல்”, “சிங்கம்”, “வேங்கை”, “சிங்கம் 2”, “பூஜை”, “சிங்கம் 3” ஆகிய பல வெற்றித் திரைப்படங்களை தந்துள்ளார்.
இவரது திரைப்படங்கள் அனைத்தும் நேட்டிவிட்டி சம்பந்தமாகவும் உறவுக்குள் நடக்கும் பாசப் போராட்டங்களை மையமாக கொண்டும் கதையம்சம் கொண்டிருக்கும். மேலும் இவரது திரைப்படங்களில் ஆக்சன் காட்சிகளும், சென்டிமண்ட் காட்சிகளும் ரசிக்கும் படியாக இருக்கும்.
அதே போல் திரைக்கதையும் ஜெட் வேகத்தில் விறுவிறுப்பாக செல்லும். காமெடி, ஆக்சன், காதல், சென்டிமன்ட் என பக்கா கமெர்சியல் அம்சம் கொண்ட பல தரப்பட்ட ரசிகர்களை கவரும் விதமாகவே ஹரியின் திரைப்படங்கள் அமையும்.
மேலும் இவர் திரைப்படங்களில் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆகும். இவர் இயக்கிய “சாமி” திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இப்போதும் ரசிக்ககூடியவை. அதே போல் “ஆறு”, “அருள்”, ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கும். இவரது “சிங்கம்” 3 பாகங்களும் மெஹா ஹிட் திரைப்படங்கள் ஆகும்.
எனினும் சமீபத்தில் வெளிவந்த “சாமி 2” திரைப்படம் பெரிதாக எடுபடவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் “யானை” என்ற திரைப்படத்தை ஹரி இயக்கி வருவதாக தகவல்கள் தெரிவித்தன. மேலும் திரைப்படம் குறித்த அப்டேட்டுகளும் பல வெளிவந்தன.
இதனை தொடர்ந்து தற்போது “யானை” திரைப்படத்தின் விறுவிறுப்பான டிரைலர் வெளியாகியுள்ளது. காமெடி, ஆக்சன், சென்டிமன்ட், காதல் என மீண்டும் கலந்து கட்டி ஹரி Come back கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
இத்திரைப்படத்தில் அருண் விஜய்யுடன், பிரியா பவானி ஷங்கர், அம்மு அபிராமி, யோகி பாபு, ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி, புகழ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி. வி. பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.