CINEMA
ரஜினிக்கு கதை சொன்ன ஹெச் வினோத்… கைப்பற்றிய உலக நாயகன்… செம மேட்டர் பா!!
ரஜினிக்கு ஹெச் வினோத் சொன்ன கதையை கமல் ஹாசன் ஓகே பண்ணியுள்ளாராம்.
அஜித் நடிக்கும் “AK 61” திரைப்படத்தை ஹெச் வினோத் தற்போது இயக்கி வருகிறார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார். அஜித்- ஹெச் வினோத்- போனி கபூர் கூட்டணி “நேர்கொண்ட பார்வை”, “வலிமை” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் “AK 61” திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.
“AK 61” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு Robbery-ஐ மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படம் என அறியப்படுகிறது. இதற்கு முன் ஹெச் வினோத் அஜித்தை வைத்து இயக்கிய “வலிமை” திரைப்படம் போதை பொருள் கடத்தல் கும்பல் பற்றியது. அதே போல் இந்த “AK 61” திரைப்படமும் ஒரு சமூக விழிப்புணர்வு கருத்தை மையமாக வைத்து எடுக்கப்படுவது போல் தெரிகிறது.
ஹெச் வினோத் “AK 61” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. “AK 61” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் குறித்தான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் கமல் ஹாசனுடன் இணைய உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதை விட ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் இந்த கதையை கமல் ஹாசனிடம் கொண்டு செல்வதற்கு முன்பாக இதனை ஹெச் வினோத் ரஜினியிடம் தான் கொண்டு சென்றாராம்.
ஆனால் ரஜினிக்கு அக்கதை பிடிக்கவில்லையா என தெரியவில்லை. தற்போது அந்த கதையை கமல் ஹாசன் ஓகே செய்துள்ளராம். இவ்வாறு பல சுவாரசியமான தகவல்கள் வலம் வருகிறது.