CINEMA
“GHOST MODE VIKRAM” …தெறி மாஸ் டிரைலர்..
விக்ரம் திரைப்படத்தின் தெறி மாஸ் டிரைலர் வெளிவந்துள்ளது..
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் “விக்ரம்” திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இவ்விழா வருகிற 22 ஆம் தேதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
டிரைலர் வெறித்தாமாக இருக்கிறது. Full and full action block தான். மாஸ், வேற லெவல் என்று சொல்லிக் கொண்டே போகலாம். கமலின் கெட் அப் தெறி லுக். விஜய் சேதுபதி பயங்கர வில்லன் போல் காட்சி தருகிறார். ஃபகத் ஃபாசில் கண்களில் வெறி தள்ளாடுகிறது.
அனிருத் பிஜிஎம்மில் மாஸ் காட்டி இருக்கிறார். பட்டாசாக இருக்கிறது ஒவ்வொரு ஃபிரேமும். நிஜமாக ஜூன் 3 அன்று திருவிழா தான் போல. மாஃபியா கும்பல்களுக்கு நடுவே நடக்கும் மோதல் தான் படத்தின் கருவாக இருக்கும் என வியூகிக்க முடிகிறது. துப்பாக்கி, மிஷின் ‘gun’ என அனல் பறக்கிறது.
நிஜமகவே “ghost” மோடு தான் போல. விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3 அன்று திரையில் ஜொலிக்க உள்ளது. அதுவரை இந்த டிரைலரே போதும் என ரசிகரகள் குஷியாக உள்ளனர்.