CINEMA
விஜய்க்கு வில்லனாக நடிக்கும் கௌதம் மேனன்??? மாஸ் தகவல்!!
விஜய்க்கு வில்லனாக கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத் குமார், பிரபு, குஷ்பு, யோகி பாபு, ஷாம் ஆகிய பலரும் நடித்து வருகின்றனர். எஸ் ஜே சூர்யாவும் நடிப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.
“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையமைத்து வருகிறார். “வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவருகிறது. தெலுங்கில் “வாரசடு” என்ற பெயரில் வெளிவருகிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
“வாரிசு” திரைப்படத்தை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடனே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. “மாஸ்டர்” திரைப்படத்தை தொடர்ந்து இத்திரைப்படத்தில் லோகேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இத்திரைப்படத்தில் விஜய் படம் முழுக்க நெகட்டிவ் ரோலில் வருவதாகவும் செய்திகள் தெரிவித்தன. இந்நிலையில் இத்திரைப்படம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
அதாவது இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கும் முக்கிய நடிகர் குறித்த தகவல் தான் அது. விஜய்க்கு வில்லனாக பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பிரித்விராஜ், சஞ்சய் தத், அர்ஜூன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்தன. மேலும் இத்திரைப்படத்தில் 6 வில்லன்கள் என கூறப்படுகிறது.
இதில் நடிகை சமந்தாவின் பெயரும் பேச்சில் அடிபட்டது. இந்த நிலையில் தான் தற்போது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.