CINEMA
மீண்டும் புறக்கணிக்கப்பட்ட “என்ஜாயி என்சாமி” பாடகர் அறிவு.. கடுப்பில் வெளியிட்ட பதிவு
பிரபல ராப் பாடகர் தெருக்குரல் அறிவு மீண்டும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
பிரபல ராப் பாடகரான தெருக்குரல் அறிவு, “தெருக்குரல்” என்ற தனி ஆல்பம் மூலமாக பரவலாக அறியப்பட்டார். இவர் பல திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். எனினும் இவர் எழுதி, பாடகி தீ உடன் இவர் பாடிய “என்ஜாய் என்சாமி” தனிப் பாடல் வேற லெவல் ஹிட் ஆனது. அப்பாடல் வெளிவந்த போது உலகமே அப்பாடலை விரும்பி கேட்டது.
இப்பாடல் வெளியான சில நாட்களில் “ரோலிங்க் ஸ்டோன்” என்ற பிரபல இதழ் “என்ஜாயி என்சாமி” பாடல் குறித்து எழுதியபோது அதன் அட்டை படத்தில் பாடகர் அறிவு புகைப்படத்தை பதிப்பிக்கவில்லை. இதனை தொடர்ந்து பெரும் சர்ச்சை எழுந்தது. அதன் பின் பாடகர் அறிவு புகைப்படத்தை அட்டை படத்தில் பதிப்பித்து வெளியிட்டது.
இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் இது போன்ற ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது கடந்த 28 ஆம் தேதி சென்னையில் நடைபெற்று வரும் ஒலிம்பியாட் செஸ் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. அதில் என்ஜாயி என்சாமி பாடலை பாடகி தீ பாடினார். இதில் பாடகர் அறிவு இடம்பெறவில்லை. இது மீண்டும் இணையத்தில் சர்ச்சையாக தற்போது அறிவு தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில் “நான் என்ஜாயி என்சாமி பாடலை எழுதினேன், பாடினேன், கம்போஸ் செய்தேன். இப்பாடலில் இடம்பெற்ற எந்த வரிகளும் ட்யூனும் யாரும் எனக்கு தரவில்லை. இதற்காக நான் 6 மாதங்கள் தூக்கமில்லா இரவுகளை செலவிட்டேன்” என கூறியுள்ளார்.
மேலும் கூறிய அவர் “இப்பாடல் நமது மூதாதையரின் வலியையும் காதலையும் சுமந்துள்ளது. நீங்கள் தூங்கும் போது உங்கள் பொக்கிஷங்களை யார் வேண்டுமானாலும் திருட முடியும். ஆனால் முழித்திருக்கும்போது முடியாது. ஜெய் பீம்” என கூறியுள்ளார்.
View this post on Instagram