CINEMA
“இங்கிலிஷ் படத்தை காப்பி அடித்த நயன்தாரா”…?? ஆதங்கத்தில் ரசிகர்கள்
நயன்தாராவின் O2 திரைப்படம் ஆங்கில திரைப்படம் ஒன்றை காப்பி அடித்து எடுக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.
நயன்தாரா நடிப்பில் உருவான O2 திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. ஒரு பேருந்து மணல் சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்து விடுகிறது. அப்பேருந்தை போலீஸார் தேடி வருகின்றனர். அப்பேருந்தில் நயன்தாரா உட்பட பலரும் சிக்கியுள்ளனர். அங்கே ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட அங்கிருந்து அவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பது தான் கதை என O2 திரைப்படத்தின் டீசரை பார்க்கும் போது எளிதாகவே வியூகிக்க முடிகிறது.
இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான “Sink Hole’ என்ற திரைப்படமும் இதே கதை தான் என இணையவாசிகள் அத்திரைபடத்தின் டிரைலரை வைரலாக்கி வருகின்றனர். “Sink Hole” திரைப்படத்தின் டிரைலரில் பூகம்பம் ஏற்பட்டு பேருந்து ஒன்று பூமிக்குள் புதைந்து போகிறது. அப்பேருந்தில் உள்ளவர்கள் எப்படி மீண்டார்கள் என்பது தான் அத்திரைப்படத்தின் கதை என அந்த டிரைலரை பார்த்தும் வியூகிக்க முடிகிறது.
இணையத்தில் ரசிகர்கள் இத்திரைப்படத்தின் காப்பி தான் நயன்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் O2 திரைப்படம் என கமண்ட் அடித்து வருகின்றனர். அதே போல் கடந்த 2021 ஆம் ஆண்டு “Sink Hole” என்ற அதே பெயரில் வெளிவந்த ஒரு கொரியன் திரைப்படமும் இருக்கிறது. அதிலும் பூகம்பம் வந்து சிலர் மண் சரிவில் புதைந்து போகிறர்கள். அவர்கள் அங்கிருந்து எப்படி தப்பிப்பார்கள் என்பது தான் கதையும் கூட.
O2 திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளிவர இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவருகிறது. இந்நிலையில் இத்திரைப்படம் காப்பி என சர்ச்சை எழுந்துள்ளது.