CINEMA
“DON” இவ்வளவு பெரிய படமா?? ரன்னிங் டைம் பார்த்து அரண்டுபோன ரசிகர்கள்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் “டான்” திரைப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
வருகிற மே 13 ஆம் தேதி சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த “டான்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை லைகா நிறுவனமும் சிவகார்த்திகேனும் இணைந்து தயாரித்துள்ளனர். சிபி சக்கரவர்த்தி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சக்கை போடு போடுகிறது. வெளியிவந்த மூன்று பாடல்களும் ரசிக்கும் படியாக உள்ளது. அதிலும் “ஜலபுலஜங்க்” பாடல் இளைஞர்களை துள்ளாட்டம் போட வைத்துள்ளது.
இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். ஏற்கனவே “டாக்டர்” திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அத்திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. இப்படமும் அதே போல் இந்த ஜோடியும் வொர்க் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இத்திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா, சமுத்திரகனி, சூரி, ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் “குக் வித் கோமாளி” ஷிவாங்கி, முனிஸ் காந்த், காளி வெங்கட், பிக் பாஸ் புகழ் ராஜூ ஜெயமோகன் ஆகியோர் நடித்துள்ளனர். குறிப்பாக கௌதம் வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என தெரியவருகிறது.
இத்திரைப்படம் ஏற்கனவே மார்ச் 22 ஆம் தேதியே வெளியிட திட்டமிடப்பட்டது. எனினும் சில காரணங்களால் இத்திரைப்படம் மே மாதத்திற்கு தள்ளிபோனது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
“டான்” திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2.43 மணி நேரம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. “படம் இவ்வளவு பெருசா?” என சமூக வலைத்தளங்களில் ஆங்காங்கே சில ரசிகர்கள் ஆச்சரியத்தோடு இத்தகவலை பகிர்ந்து வருகிறார்கள். எனினும் வெகு நாள் எதிர்பார்த்திருந்த சிவகார்த்திகேயன் திரைப்படம் வெளிவரவிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.