CINEMA
ஓடிடியில் “டான்”… எப்போ ரிலீஸ் தெரியுமா?
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து மாஸ் ஹிட் ஆன “டான்” திரைப்படம் ஓடிடியில் வெளிவர உள்ளது.
சிவகார்த்திகேயனை தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை என சினிமா வட்டாரங்களில் கூறுவது உண்டு. அதாவது அவரின் திரைப்படங்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து விதமான ஆடியன்ஸ்களையும் ரசிக்க வைக்கும் என ஒரு பேச்சு உண்டு.
சமீபத்தில் வெளியான “டான்” திரைப்படத்தில் சிறுவர்கள் ரசிக்கும்படியான காட்சிகள் பல உள்ளன என திரையரங்குகளில் படம் பார்க்க வரும் சிறுவர்கள் கூறினார்கள். மேலும் கல்லூரி வாழ்க்கையின் குஷியான தருணங்களை திரைப்படம் பதிவு செய்திருப்பதால் இளைஞர்களுக்கும் இது பெரிய டிரீட்.
அதே போல் அப்பா சென்டிமண்ட் காட்சிகள் மனதை உருக்கும் படி அமைக்கப்பட்டிருப்பதால் பெரியவர்களுக்கும் இத்திரைப்படம் ரசிக்கும்படியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வந்தனர்.
குறிப்பாக இது போன்ற கமெர்சியல் அம்சங்கள் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களாக அமையும். அந்த வகையில் “டான்” குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாகவும் அமைந்துள்ளது.
“டான்” திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆஃபீஸில் 100 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் “டான்” திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. ஆம்!
வருகிற ஜூன் மாதம் 10 ஆம் தேதி நெட்ஃப்ளிகிஸ் ஓடிடி தளத்தில் “டான்” திரைப்படம் வெளியாகவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை நெட்ஃபிளிக்ஸ் இந்தியா ஓடிடி தளம் வெளியிட்டுள்ளது.
“டான்” திரைப்படத்தில் அப்பா சென்டிமண்ட் காட்சிகள் தரமாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. திரையரங்குகளில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்கள் தங்களது தந்தையை நினைத்து உருகி அழுததை நாம் பார்த்திருப்போம். இந்நிலையில் “டான்” திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது. தற்போது மீண்டும் குடும்பத்தோடு “டான்” திரைப்படத்தை காண இருப்பதால ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
It’s time to put on your dancing shoes and do the Jalabulajangu with us, because the DON is arriving on June 10th! 🎉🕺🥳#DonOnNetfix pic.twitter.com/5hQbfTuJ3I
— Netflix India South (@Netflix_INSouth) May 28, 2022
