Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

திரையில் கலக்கப்போகுது “DON”, வெளியானது “ஜலபுலஜங்க்” புரோமோ..

CINEMA

திரையில் கலக்கப்போகுது “DON”, வெளியானது “ஜலபுலஜங்க்” புரோமோ..

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “டான்” திரைப்படத்தில் இடபெற்ற “ஜலபுலஜங்க்” பாடலின் புரோமோ வெளிவந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ். ஜே. சூர்யா, ராதாரவி, சூரி, முனீஸ்காந்த், ஷிவாங்கி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராகவும் பள்ளி மாணவராகவும் இளமையாக காட்சித் தருகிறார். எஸ். ஜே. சூர்யா கல்லூரி முதல்வர் கதாப்பாத்திரத்தில் புதுமையான தோற்றத்தில் நடிக்கிறார்.  அதே போல் பள்ளி மாணவியாகவும் கல்லூரி மாணவியாகவும் பிரியங்கா மோகன் க்யூட்டாக காட்சி தருகிறார்.

வில்லனாக வரும் எஸ். ஜே. சூர்யா மெர்சல், மாநாடு ஆகிய திரைப்படங்கள் போலவே இத்திரைப்படத்திலும் மாஸ் வில்லனாக காட்சி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைலரை பார்க்கும்போது ஒரு கல்லூரியில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடக்கும் போரட்டமே கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் “டான்” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஜலபுலஜங்க்” பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் கலர் ஃபுல்லாகவும் வெறித்தனமாகவும் நடனமாடுகிறார். கல்லூரி விழா ஒன்றில் இப்பாடல் இடம்பெறுவது போல் பிரம்மாண்ட செட்டுகள் போடப்பட்டுள்ளது. செல்பிரேஷன் மோடில் கல்லூரி மாணவர்கள் ஆடும் ஒரு ஜாலியான கலகலப்பான பாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

“ஜலபுலஜங்க்” பாடல் பல மாதங்களுக்கு முன்பே சிங்கிளாக வெளியேறி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இப்பாடலை இணையத்தில் பலர் இன்ஸ்டா ரீல்ஸ் செய்திருக்கிறார்கள். இப்பாடல் வெறித்தனமாக ரசிகர்களால் குத்தாட்டம் போடும் அளவுக்கு டிரெண்ட் ஆனது.

இந்நிலையில் இப்பாடலின்புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top