CINEMA
100 crore கிளப்பில் இணையும் “டான்”… வெறித்தனமான வசூல்..
“டான்” திரைப்படத்தின் வேர்லட் லெவல் பாக்ஸ் ஆஃபீஸ் ரூ. 100 கோடி வசூலை நெருங்கியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “டான்” திரைப்படம் கடந்த 10 நாட்களுக்கு முன் வெளியான நிலையில் தமிழகம் முழுவதும் சுமார் ரூபாய் 50 கோடிக்கும் மேல் கலெக்சன் பார்த்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் தற்போது உலகளவில் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சன் எவ்வளவு என்று தெரியுமா?
அதாவது தற்போது “டான்” திரைப்படம் உலகளவில் சுமார் ரூபாய் 97 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஒன்றோ அல்லது இரண்டோ நாட்களில் “டான்” திரைப்படம் உலகளவில் சுமார் ரூபாய் 100 கோடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனை தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை என சினிமா வட்டாரங்களில் கூறுவது உண்டு. அதாவது அவரின் திரைப்படங்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து விதமான ஆடியன்ஸ்களையும் ரசிக்க வைக்கும் என ஒரு பேச்சு உண்டு.
சமீபத்தில் வெளியான “டான்” திரைப்படத்தில் சிறுவர்கள் ரசிக்கும்படியான காட்சிகள் பல உள்ளன என திரையரங்குகளில் படம் பார்க்க வரும் சிறுவரகள் கூறுகிறார்கள். மேலும் கல்லூரி வாழ்க்கையின் குஷியான தருணங்களை திரைப்படம் பதிவு செய்திருப்பதால் இளைஞர்களுக்கும் இது பெரிய டிரீட்.
அதே போல் அப்பா சென்டிமண்ட் காட்சிகள் மனதை உருக்கும் படி அமைக்கப்பட்டிருப்பதால் பெரியவர்களுக்கும் இத்திரைப்படம் ரசிக்கும்படியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக இது போன்ற கமெர்சியல் அம்சங்கள் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களாக அமையும். அந்த வகையில் “டான்” குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் “டான்” திரைப்படம் உலகளவில் பாக்ஸ் ஆஃபீஸில் 100 crore கிளப்பில் விரைவில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.