CINEMA
பிளாக் பஸ்டர் ஹிட் “டான்”.. எவ்வளவு வசூல் தெரியுமா?
“டான்” திரைப்படம் சென்ற வாரம் வெளியான நிலையில் தற்போது மொத்த கலெக்சன் ரிப்போர்ட் சுட சுட வெளிவந்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “டான்” திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இதனை தொடர்ந்து “டான்” திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் ரூபாய் 60 கோடிக்கும் மேல் கலெக்சன் பார்த்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் “டான்” திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா?
அதாவது தமிழ்கத்தில் சுமார் ரூ. 48 கோடிக்கும் மேல் கலெக்சன் அள்ளி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயன் திரைப்படம் என்றாலே கலெக்சன் அதிரிபுதிரியாக இருக்கும். இந்நிலையில் மேலும் பல கோடி ரூபாய் கலெக்சன் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“டான்” திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையான சமுத்திரக்கனி, ஒரு ஸ்டிரிக்ட் அப்பா எப்படி இருப்பாரோ அந்த யதார்த்தத்தை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். கல்லூரி மாணவனாக வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிளிர்கிறார். நடிப்பிலும் சரி நடனத்திலும் சரி எனர்ஜி லெவலில் மாஸ் காட்டுகிறார் என பரவலாக இணையத்தில் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திரைப்படத்தின் அல்டிமேட் பலம் எஸ். ஜே. சூர்யா தான். அவரின் நடிப்பை பற்றி நாம் கூற தேவையில்லை. வில்லனாக மாஸ் காட்டுகிறார். தனது நடிப்பால் சக நடிகர்கள் மீது கண்களை போக விடாமல் பார்வையாளர்களை கட்டிப்போடுகிறார் என பல சினிமா விமர்சகர்கள் எழுதி வருகின்றனர். இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு இது முதல் படம் போலவே தெரியவில்லை. ஒரு matured இயக்குனராக இப்படத்தை இயக்கியுள்ளார் என பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.