CINEMA
“இந்த காட்சியை இப்படித் தான் எடுத்தாங்களா”… வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் “டான்” மேக்கிங் வீடியோ
“டான்” திரைப்படத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட கொரியன் நகைச்சுவை காட்சியின் கலகலப்பான மேக்கிங் வீடியோ வெளிவந்துள்ளது.
கடந்த மே மாதம் 13 ஆம் தேதி சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “டான்”. இத்திரைப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கி இருந்தார்.
சிவகார்த்திகேயனை தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை என சினிமா வட்டாரங்களில் கூறுவது உண்டு. அதாவது அவரின் திரைப்படங்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து விதமான ஆடியன்ஸ்களையும் ரசிக்க வைக்கும் என ஒரு பேச்சு உண்டு.
மேலும் சிறுவர்கள் ரசிக்கும்படியான காட்சிகள் பல உள்ளன என திரையரங்குகளில் படம் பார்க்க வரும் சிறுவர்கள் உற்சாகத்தோடு கூறினார்கள். மேலும் கல்லூரி வாழ்க்கையின் குஷியான தருணங்களை திரைப்படம் பதிவு செய்திருப்பதால் இளைஞர்களுக்கும் இது பெரிய டிரீட்.
அதே போல் அப்பா சென்டிமண்ட் காட்சிகள் மனதை உருக்கும் படி அமைக்கப்பட்டிருப்பதால் பெரியவர்களுக்கும் இத்திரைப்படம் ரசிக்கும்படியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வந்தனர்.
“டான்” திரைப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகள் பரவலாக ரசிக்கப்பட்டன. குறிப்பாக சிவகார்த்திகேயன் கல்லூரிக்கு தனது தந்தை என கூறி சூரியை அழைத்து வந்திருப்பார். அப்போது சிவகார்த்திகேயன், சூரி இருவரும் மாற்றி மாற்றி கொரியன் மொழி போல் பேசிக்கொள்ளும் காட்சி பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது.
இந்நிலையில் இக்காட்சியின் மேக்கிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இக்காட்சியை எடுக்கும் போது நடிகர்கள் உட்பட படக்குழுவினர் அனைவரும் சிரிப்பில் மூழ்கினர். மிகவும் கலகலப்பாக இக்காட்சியை இயக்குனர் இயக்கி உள்ளார் என தெரிகிறது. “டான்” திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தற்போது காணக் கிடைக்கிறது.
video courtesy: Kondattam Tamil
