Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

இரண்டு டாப் நடிகர்களை குறிவைக்கும் டான் இயக்குனர்… இவரா? இல்லை அவரா?

CINEMA

இரண்டு டாப் நடிகர்களை குறிவைக்கும் டான் இயக்குனர்… இவரா? இல்லை அவரா?

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் இரண்டு பேரை குறிவைத்துள்ளாராம் “டான்” திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்ரவர்த்தி.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான திரைப்படம் “டான்”. இத்திரைப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் நல்ல வரவேற்பையே பெற்றது.

குறிப்பாக திரைப்படத்தில் இடம்பெற்ற அப்பா சென்டிமென்ட் காட்சிகள் பலரையும் கண்கலங்க வைத்தது. அனிருத் இசையில் பாடல்கள் ஹிட் அடித்தன. கதாநாயகியாக நடித்த பிரியங்கா மோகன் அழகு பதுமையாக வந்து பார்வையாளர்களை கொள்ளைகொண்டார்.

இத்திரைப்படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். “மெர்சல்” திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதே இவர் விஜய்க்கு கதை சொன்னதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தனது அடுத்த திரைப்படத்தில் விஜய்யை கதாநாயகனாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து “தளபதி 67” திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ்ஜுடன் விஜய் இணையவுள்ளார். இதன் பின் “தளபதி 68” திரைப்படத்தில் விஜய் சிபி சக்ரவர்த்தியோடு இணையலாம் என கூறப்படுகிறது.

அதே போல் சிபி சக்ரவர்த்தி ரஜினிகாந்திற்கு ஒரு கதை வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை விஜய்யை வைத்து இயக்கமுடியவில்லை என்றால் “தலைவர் 170” திரைப்படத்திற்கு குறிவைக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் லோகேஷுடன் இணையலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தான் சிபி சக்ரவர்த்தி தனது அடுத்த திரைப்படத்தை ரஜினி அல்லது விஜய்யை வைத்து இயக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top