Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“பெரியப்பாவை கொடுத்ததற்கு நன்றி”… இயக்குனர் ஷங்கரின் ஷார்ட் ரிவ்யூ..

CINEMA

“பெரியப்பாவை கொடுத்ததற்கு நன்றி”… இயக்குனர் ஷங்கரின் ஷார்ட் ரிவ்யூ..

கே. ஜி. எஃப். 2 திரைப்படம் குறித்து இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

“கே. ஜி. எஃப்2 ” திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சக்கை போடு போட்டது. பாக்ஸ் ஆஃபிஸில் 1000 கோடிகளுக்கு மேல் அள்ளிக்கொண்டு இருக்கிறது.

“கே. ஜி. எஃப்.” முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் Goosebumps காட்சிகள் அதிகமாக இடம்பெற்றிருந்தன. மேலும் திரைப்படத்தின் இடை இடையே வரும் அம்மா சென்டிமென்ட்களும் “தன்னானத்தானே” குரலும் நம்மை நெகிழச்செய்யவும் தவறவில்லை.

இத்திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ சமீப காலமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. கே. ஜி. எஃப். திரைப்படம் மட்டுமல்லாது படப்பிடிப்பு செட்டே பயங்கரமாக உள்ளது.

மேலும் இத்திரைப்படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் தங்களது நினைவுகளையும் இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களையும் மேக்கிங் வீடியோவில் பகிர்ந்துள்ளனர்.

இயக்குனர் பிரசாந்த் நீல் மிகவும் பரபரப்பாகவும் நேர்த்தியாகவும் வேலை செய்கிறார். மூன்றாயிரத்திற்கும் மேலான ஜூனியர் ஆர்டிஸ்ட்களை எப்படி சமாளித்தார்கள் என்று படக்குழுவினர் கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கே. ஜி. எஃப். 2 திரைப்படத்தை பார்த்து பிரம்மித்து போய் உள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில்…

 “கே. ஜி. எஃப். 2 பார்த்துவிட்டேன். கதை சொன்ன விதமும், திரைக்கதையும், படத்தொகுப்பும் ஸ்டைலாக உள்ளது. ஆக்சன் காட்சிகளும் வசனங்களும் அழகாக வொர்க் அவுட் ஆகியுள்ளது. நடிகர் யாஷின் ஸ்டைல் மிளிர்கிறது. இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு நன்றி, எங்களுக்கு “பெரியப்பா” அனுபவத்தை தந்ததற்கு. சண்டை இயக்குனர் அன்பறிவ் குழு அசத்தியிருக்கிறார்கள்” என வாழ்த்துகளை பொழிந்துள்ளார்.

இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர், கே. ஜி. எஃப். திரைப்படத்தை புகழ்ந்துள்ளது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

 

Continue Reading

More in CINEMA

To Top