Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“என் பொண்ணு பாதுகாப்பா இருக்காங்க”.. முத்தையாவை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் ஷங்கர்

CINEMA

“என் பொண்ணு பாதுகாப்பா இருக்காங்க”.. முத்தையாவை புகழ்ந்து தள்ளிய இயக்குனர் ஷங்கர்

“விருமன்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் முத்தையாவை புகழ்ந்து தள்ளியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.

கார்த்தி நடிப்பில் உருவான “விருமன்” திரைப்படத்தை முத்தையா இயக்கி உள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகி உள்ளார்.

மேலும் இவர்களுடன் சூரி, ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன் என பலரும் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். “விருமன்” திரைப்படத்தை 2D என்டெர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா தயாரித்துள்ளார்.

இந்நிலையில் “விருமன்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மதுரையில் நடைபெற்றது. அவ்விழாவில் சூர்யா, கார்த்தி, பாரதிராஜா, சூரி, இயக்குனர் ஷங்கர், அதிதி ஷங்கர், யுவன் ஷங்கர் ராஜா, முத்தையா, சு. வெங்கடேசன் என பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய இயக்குனர் ஷங்கர் “தேசிய விருது பெற்ற சூர்யாவுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறினார்.

மேலும் பேசிய அவர் “இயக்குனர் முத்தையாவின் படங்களை நான் பார்த்ததில்லை. அவர் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கேட்டிருக்கிறேன். மிகவும் அருமையாக இருக்கும் அந்த பாடல்கள்.

ஆனால் அவருடைய திரைப்படங்களில் பெண்களின் கதாப்பாத்திரங்களை அருமையாக சித்தரிப்பார் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆதலால் எனது மகள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறார் என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்” எனவும் கூறினார்.

“எனது மகளுக்கு அட்வைஸ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த கால தலைமுறைகள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அவருக்கு அட்வைஸ் செய்தாலும் பிடிக்காது. நம்மை பார்த்து நாலு விஷயம் தெரிந்து கொண்டால் அதுவே பெரிய விஷயம் தான்” எனவும் கூறினார். “விருமன்” திரைப்படம் வருகிற 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top