Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

இனிமே வெறும் ஷங்கர் இல்லை, டாக்டர் ஷங்கர்…

CINEMA

இனிமே வெறும் ஷங்கர் இல்லை, டாக்டர் ஷங்கர்…

தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

தமிழின் பிரம்மாண்ட இயக்குனராக அறியப்படும் ஷங்கர், ஆரம்ப காலத்தில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதனை தொடர்ந்து சில திரைப்படங்களிலும் நடித்தார்.

இதனை தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு “ஜென்டில் மேன்” திரைப்படத்தை இயக்கினார். தனது முதல் திரைப்படத்திலேயே “ஷங்கர்” என்ற முத்திரையை பார்வையாளர்களின் மனதில் பதித்தார். அதனை தொடர்ந்து காதலன் திரைப்படத்தை இயக்கினார். இதன் பின் தான் கமல் ஹாசன் நடிப்பில் “இந்தியன்” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. தமிழின் மிகப் பிரம்மாண்டமான வெற்றித் திரைப்படமாகவும் அமைந்தது. மேலும் இத்திரைப்படத்தில் பாடல்களில் உபயோகிக்கப்பட்ட கிராபிக்ஸ் காட்சிகள் மக்களை வியப்பில் ஆழ்த்தியது. தொழில்நுட்பத்தில் ஷங்கர் விளையாட ஆரம்பித்தது “இந்தியன்” திரைப்படத்தில் தான் என கூறலாம்.

அதனை தொடர்ந்து “ஜீன்ஸ்”. “ஜீன்ஸ்” திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவையே புரட்டி போட்ட “முதல்வன்” என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்போதும் இத்திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் ரசித்து பார்ப்பவர்கள் பலர் உண்டு.

இதனை தொடர்ந்து “பாய்ஸ்”, “பாய்ஸ்” க்கு பிறகு பாக்ஸ் ஆஃபீஸை கலக்கு கலக்கு என கலக்கிய “அந்நியன்”. அதன் பின் பிரம்மாண்டத்தின் உச்சமான “எந்திரன்”, ஷங்கரை உலகமே திரும்பிப் பார்க்க வைத்தது. அதன் பின் “நண்பன்”, “ஐ”, ஆகிய வெற்றித் திரைப்படங்களை கொடுத்த ஷங்கர் “2.0” திரைப்படத்தில் மீண்டும் அசரவைக்கும் தனது பிரம்மாண்டத்தால் உலகத்தையே திரும்பி பார்க்கவைத்தார்.

தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து “இந்தியன் 2” திரைப்படம் உருவாக உள்ளது. ஷங்கர் “இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி”, “காதல்”, “வெயில்”, “கல்லூரி” என பல வெற்றித் திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இயக்குனர் ஷங்கருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அதில் தமிழக கவர்னர் ஆர் என் ரவி ஷங்கருக்கு டாக்டர் பட்டம் வழங்கினார். இச்செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top