CINEMA
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் எப்படி Transform ஆகிருக்காங்க பாருங்க?
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் “விருமன்” திரைப்படத்தின் “கஞ்சா பூவு கண்ணால பாடல்” வெளியாகியுள்ளது.
தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடிக்கும் “விருமன்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆக உள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வந்தது.
இதனை தொடர்ந்து “விருமன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “கஞ்சா பூவு கண்ணால” என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் கிராமத்து பெண்ணாக நேட்டிவிட்டியில் கலக்குகிறார் அதிதி ஷங்கர்.
“விருமன்” திரைப்படத்தை பிரபல இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். இவர் “குட்டிப் புலி”, “கொம்பன்”, “மருது”, “தேவராட்டம்”, “கொடி வீரன்”, “புலிக்குத்தி பாண்டி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். இவரது திரைப்படங்கள் அனைத்தும் கிராமத்து எளிய மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதை போன்ற கதையம்சத்துடன் அமைந்திருக்கும்.
இவர் இயக்கிய “குட்டிப் புலி”, “கொம்பன்” ஆகிய திரைப்படங்கள் மாஸ் ஹிட் ஆன திரைப்படங்கள். இதில் “கொம்பன்” திரைப்படத்திற்கு பிறகு தற்போது கார்த்தியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
“விருமன்” திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 2D என்டர்டெயிண்மென்ட் சார்பாக சூர்யா மற்றும் ஜோதிகா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். செல்வ குமார் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதில் கார்த்தி, அதிதி ஷங்கர் ஆகிய இருவருடன் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, கருணாஸ், சிங்கம் புலி, மனோஜ் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் இடம் பெற்ற “கஞ்சா பூவு கண்ணால” பாடல் வெளிவந்துள்ளது. இப்பாடலை கருமத்தூர் மணிமாறன் எழுதியுள்ளார்.