CINEMA
இரும்புத்திரை இயக்குனருக்கு நிச்சயதார்த்தம்.. பெண் யார் தெரியுமா?
“இரும்புத்திரை” இயக்குனர் பி எஸ் மித்ரனுக்கு நிச்சயதார்த்தம் நிறைவடைந்துள்ளது.
இயக்குனர் பி எஸ் மித்ரன் விஷால் நடித்து சக்கை போடு போட்ட “இரும்புத்திரை” திரைப்படம் மூலம் இயக்குனராக சினிமா உலகில் நுழைந்தார்.
“இரும்புத்திரை” திரைப்படம் வேற லெவலில் ஹிட் ஆனது. சைபர் கிரைமில் ஈடுபட்டு பலரின் பேங்க் அக்கவுண்டில் இருந்து பணம் பறிக்கு வில்லன், கதாநாயகனின் அப்பா பேங்க் அக்கவுண்டிலும் கை வைக்கிறான். இதனை கதாநாயகன் எப்படி கண்டுபிடிக்கிறான் என்பதே மையக்கதை. விறுவிறுவென செல்லும் திரைக்கதையும் பல எதிர்பாராத டிவிஸ்டுகளும் பார்வையாளர்களை “ஓ” போட வைத்தது. அர்ஜூன் டெரிஃபிக் வில்லனாக கலக்கி இருந்தார்.
“இரும்புத்திரை” திரைப்படத்தை தொடர்ந்து மித்ரன் சிவகார்த்திகேயனை வைத்து “ஹீரோ” என்ற திரைப்படத்தை இயக்கினார். அதில் அர்ஜூன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். கல்வி வியாபாரமாக ஆகி மாணவர்களின் கற்பனை திறனுக்கும் வளர்ச்சிக்கும் தற்போதுள்ள கல்வி முறை எப்படி தடுப்பணையாக இருக்கிறது என்ற மையக்கருத்தை கொண்டு மித்ரன் “ஹீரோ” திரைப்படத்தை இயக்கி இருப்பார்.
“ஹீரோ” திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சூப்பர் ஹீரோவாக நடித்திருப்பார். எனினும் இத்திரைப்படம் சரியாக போகவில்லை. இதனை தொடர்ந்து மித்ரன் தற்போது கார்த்தியை வைத்து “சர்தார்” என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
“சர்தார்” திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார். வருகிற தீபாவளி அன்று இத்திரைப்படம் வெளிவருகிறது. இந்நிலையில் இயக்குனர் பி எஸ் மித்ரனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. ஒரு பெண் பத்திரிக்கையாளரை மணம் முடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தளத்தில் பத்திரிகையாளர் ஒருவர் பி எஸ் மித்ரனின் நிச்சயதார்த்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பலரும் இயக்குனர் பி எஸ் மித்ரனுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
