Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

தனுஷுடன் மீண்டும் இணைந்த ஐஸ்வர்யா ரஜினி… வைரல் புகைப்படம்

CINEMA

தனுஷுடன் மீண்டும் இணைந்த ஐஸ்வர்யா ரஜினி… வைரல் புகைப்படம்

தனுஷுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் இணைந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தது. இருவரின் திருமண வாழ்க்கையும் நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த ஜனவரி மாதம் தங்களது பிரிவை அறிவித்தனர். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இருவரும் பிரிந்த போதிலும் அவர்களது மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோருடன் மிகவும் பாசமாகவே இருக்கிறார்கள். குறிப்பாக தனுஷ் அவர்களை பல இடங்களுக்கு அழைத்துச்செல்கிறார். சமீபத்தில் கூட தனுஷ் அமெரிக்காவில் நடந்த “தி கிரே மேன்” திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அவர்களை அழைத்துச்சென்றிருந்தார். அங்கே அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரல் ஆகி வந்தன.

இந்த நிலையில் தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தங்களது மகன்களுக்காகவே மீண்டும் இணைந்தனர். ஆம்!

அதாவது இவர்களின் மூத்த மகனான யாத்ரா, தான் படிக்கும் பள்ளியில் விளையாட்டு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விழாவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தனது இளைய மகன் லிங்காவுடன் கலந்துகொண்டுள்ளனர். மேலும் அவர்களோடு பாடகர் விஜய் யேசுதாஸும் கலந்துகொண்டுள்ளார். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் சென்ற வாரம் வெளியான “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் நெடு நாட்கள் கழித்து ஒரு காமெடி கலந்த மனதுக்கு நெருக்கமான ஒரு ரொமான்ட்டிக் திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in CINEMA

To Top