CINEMA
“ஹோட்டல் சாப்பாடு மாதிரி படிப்பை விற்காதீங்க”… தனுஷ் ஆவேசம்
கல்வியை ஹோட்டல் சாப்பாடு போல் விற்காதீர்கள் என ஆவேசத்தோடு பேசியுள்ளார் நடிகர் தனுஷ். ஏன் தெரியுமா?
தனுஷ் நடித்த “வாத்தி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது. அதில் நூலகத்தில் புத்தகத்திற்கு நடுவே எழுதுவது போல் தனுஷ் தென்பட்டார். போஸ்டர் அட்டகாசமாக அமைந்திருந்தது.
இந்நிலையில் தற்போது “வாத்தி” திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசர் படு பயங்கரமாக இருக்கிறது. இதில் தனுஷ் ஜூனியர் ஆசிரியராக வருகிறார். திரைப்படம் பக்காவான ஆக்சன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக வசனங்கள் மாஸ் ஆக உள்ளது. “படிப்பு என்பது பிரசாதம் போன்றது. அதை கொடுங்க. ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மாதிரி விற்காதீர்கள்” என ஒரு வசனம் இடம்பெருகிறது. இதனை கொண்டு “வாத்தி” திரைப்படம் கல்வி வியாபாரமயமாக்கப்படுவதை எதிர்த்து கதாநாயகன் போராடுகிறார் என்பதை மையக்கருத்தாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
“வாத்தி” திரைப்படத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், இளவரசு ஆகிய பலரும் நடித்துள்ளனர். வெங்கி அட்லூரி இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார். ஜி வி பிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
தனுஷ் நடித்த “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி வெளிவருகிறது. அதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் “நானே வருவேன்” என்ற திரைப்படமும் வெளிவர தயாராக உள்ளது.
அதனை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” என்ற திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இது Period Film எனவும் தெரிய வருகிறது. பிரிட்டிஷ் காலத்தின் பின்னணியில் கதை நகர்கிறது என சில செய்திகள் தெரிவிக்கின்றது குறிப்பிடத்தக்கது.
