CINEMA
தாத்தாவுடன் சேர்ந்து மது அருந்தும் தனுஷ்…. நல்லா இருக்குதே இது??
தனுஷ் நடிப்பில் உருவான “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவான “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் வருகிற 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் தனுஷுடன் பிரியா பவானி ஷங்கர், ராசி கண்ணா, நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா ஆகிய பலரும் நடித்துள்ளனர்.
“திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். பல கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். இத்திரைப்படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ளார்.
இவர் இதற்கு முன் தனுஷை வைத்து “யாரடி நீ மோகினி”, “குட்டி”, “உத்தம புத்திரன்” ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது இத்திரைப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்.
“திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “தாய் கிழவி”, “மேகம் கருக்குதா”, “தேன் மொழி” ஆகிய பாடல்கள் வெளிவந்து பட்டையை கிளப்பின. குறிப்பாக “தாய் கிழவி” துள்ளல் பாடலாக அமைந்தது. “மேகம் கருக்குதா” பாடல் சிறந்த மெலோடி பாடலாக அமைந்துள்ளது. பலரும் ரசிக்கும் வண்ணம் பாடல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கலகலப்பான ஒரு காதல் திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது. தனுஷ் வெகு நாட்கள் கழித்து முழுக்க முழுக்க ஒரு காதல் திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷிற்கு ஜாலியான தாத்தாவாக பாரதி ராஜா நடித்துள்ளார். அதே போல் மிகவும் ஸ்ட்ரிக்ட்டான தந்தையாக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். மேலும் தனுஷிற்கு தோழியாக நித்யா மேனன் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர் தற்போது வைரல் ஆகி வருகிறது.