CINEMA
மணி ரத்னத்திடம் இருந்து தப்பித்து சிவகார்த்திகேயனை டார்கெட் செய்யும் தனுஷ்….
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “நானே வருவேன்” திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று விரைவில் வெளிவர உள்ளது. அது என்ன அப்டேட் என்று தெரியுமா?
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “நானே வருவேன்”. இத்திரைப்படத்தின் இறுதி கட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று விரைவில் வெளிவரும் என செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதாவது இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி “பொன்னியின் செல்வன்” முதல் பாகத்தோடு மோதும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது இத்திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகும் என தகவல் வருகிறது.
தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் “பிரின்ஸ்” திரைப்படம் வெளியாகிறது. அதே போல் கார்த்தி நடிப்பில் உருவான “சர்தார்” திரைப்படமும் வெளியாகிறது. இந்த நிலையில் தான் தற்போது “நானே வருவேன்” திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக செய்திகள் வருகின்றன.
இதனை வைத்து பார்க்கும்போது சிவகார்த்திகேயனும் தனுஷும் தீபாவளிக்கு மோதவுள்ளதாக தெரிய வருகிறது. தீபாவளி ரேஸில் கார்த்தியின் “சர்தார்” திரைப்படமும் போட்டி போட உள்ளதால் திரையரங்குகள் அலைகடல் என நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் உருவான “வாத்தி” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” என்ற திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார்.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.