CINEMA
தனுஷின் “திருச்சிற்றம்பலம்” எப்போ ரிலீஸ் ன்னு தெரியுமா?
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும்” திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தில் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது கை வசம் பல திரைப்படங்களை வைத்திருக்கிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “மாறன்” திரைப்படத்திற்கு ஓரளவு பாஸிட்டிவ் கம்மெண்டுகள் வந்தன. அதன் பின் நேற்று தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான “தி கிரே மேன்” திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் வெளியாகியது.
இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் “திருச்சிற்றம்பலம்” என்ற திரைப்படத்தை குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் தனுஷ் நடித்த “யாரடி நீ மோகினி”, “குட்டி”, “உத்தம புத்திரன்” ஆகிய திரைப்படங்களையும் இயக்கியவர். மேலும் “மீண்டும் ஒரு காதல் கதை”, “மதில்” ஆகிய திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
“திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 28 ஆம் தேதி வெளிவரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அன்றைய தினம் தனுஷ் பிறந்த நாளும் வருகிறது.
ஆதலால் தனுஷ் பிறந்த தினத்தை ஒட்டியே “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில் தற்போது post production வேலைகள் மும்முரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.