CINEMA
மணி ரத்னத்தை வம்புக்கு இழுக்கும் தனுஷ்.. என்ன ஆகப்போகுதோ??
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்திற்கு போட்டியாக தனது திரைப்படத்தை இறக்கவுள்ளார் தனுஷ்.
மணி ரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. அதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவருகிறது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளிவருகிறது.
“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத் குமார், பார்த்திபன் ஆகிய பலரும் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “பொன்னி நதி” பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஐந்து மொழிகளிலும் இப்பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “சோழா சோழா” பாடல் வெளியானது. இப்பாடல் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தின் உணர்ச்சிகளை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில் இந்த பாடல் அனைவராலும் ரசிக்கும்படியாகயும் அமைந்துள்ளது.
இந்த நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “நானே வருவேன்” திரைப்படம் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி அன்று வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அந்த நாளில் தான் “பொன்னியின் செல்வன்” திரைப்படமும் வெளியாகிறது என்பதால் மணி ரத்னம் திரைப்படத்துடன் தனுஷ் மோதப்போவதாக தெரிய வருகிறது.
தனுஷ் நடிப்பில் உருவான “வாத்தி” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” என்ற திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
