CINEMA
என்னுடைய படத்தில் தனுஷ் தான் நடிக்க வேண்டியது.. ஆனால்?? மனம் திறந்த பகத் பாசில்..
பகத் பாசில் நடித்த அந்த வெற்றிகரமான திரைப்படத்தில் தனுஷ் நடிக்க வேண்டியதாம்.. ஆனால்?
கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து ரசிகர்களை மிகவும் கவர்ந்த திரைப்படம் “கும்பலாங்கி நைட்ஸ்”. இதில் பகத் பாசில் ஷம்மி என்ற ஒரு வித்தியாசமான கதாப்பத்திரத்தில் நடித்திருப்பார். அதாவது அந்நியன் போல் உள்ளே குரூரமாகவும் வெளியே சாதாரண மனிதராகவும் தெரிவார். இந்த கதாப்பாத்திரத்தின் மூலம் தனது அசாத்திய நடிப்பால் பார்வையாளர்களை பகத் பாசில் பயமுறுத்தி இருப்பார்.
“கும்பலாங்கி நைட்ஸ்” திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் பகத் பாசிலும் ஒருவர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரசியமான தகவலை பகத் பாசில் பகிர்ந்துள்ளார்.
அதாவது “ஷம்மி கதாப்பாத்திரம் தனுஷிற்காக எழுதப்பட்ட கதாப்பாத்திரம். ஆனால் பட்ஜெட் காரணமாக தனுஷிடம் கொண்டு செல்ல முடியவில்லை. அதனால் அந்த கதாப்பாத்திரத்தில் நானே நடித்துவிட்டேன்” என கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது வைரல் ஆகி வருகிறது.
“கும்பலாங்கி நைட்ஸ்” திரைப்படத்தில் பகத் பாசிலுடன் ஷானே நிகம், சௌபின் ஷஹிர், ஸ்ரீநாத் பாசி, மாத்யூ தாமஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை மது சி. நாராயணன் இயக்கி இருந்தார். பிரபல திரைக்கதை எழுத்தாளரும் தேசிய விருதும் வாங்கிய ஷ்யாம் புஷ்கரன் இத்திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி இருந்தார்.
பகத் பாசில் மலையாள திரை உலகில் மட்டுமல்லாது தற்போது தமிழிலும் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்போது பகத் பாசில் மலையாளத்தில் “மலையங்குஞ்சு” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 22 ஆம் தேதி வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.