CINEMA
தளபதி படத்திற்காக ஜில் ஜங் ஜக் இயக்குனரை கூட்டு சேர்த்த லோகேஷ் கனகராஜ்…
“தளபதி 67” திரைப்படத்திற்காக “ஜில் ஜங் ஜக்” இயக்குனரை கூட்டுச் சேர்த்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
“தளபதி 67” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பது நம் எல்லோரும் அறிந்ததே. இந்த நிலையில் “ஜில் ஜங் ஜக்” திரைப்படத்தின் இயக்குனர் தீரஜ் வைத்தியை திரைக்கதையை மெறுகேற்றுவதற்காக தன்னுடன் இணைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
ஏற்கனவே “மேயாத மான்”, “ஆடை”, “குலுகுலு” போன்ற திரைப்படங்களை இயக்கிய ரத்ன குமார், லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணைந்து “கைதி”, “மாஸ்டர்”, “விக்ரம்” என பல திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார். இதனை தொடர்ந்து தீரஜ் வைத்தியும் இவர்களுடன் இணைய உள்ளதாக செய்திகள் தெவிக்கின்றன.
View this post on Instagram
விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத் குமார், பிரபு, குஷ்பு, யோகி பாபு, ஷாம் ஆகிய பலரும் நடித்து வருகின்றனர்.
“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையமைத்து வருகிறார். “வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவருகிறது. தெலுங்கில் “வாரசடு” என்ற பெயரில் வெளிவருகிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
“வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடனே லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. “மாஸ்டர்” திரைப்படத்தை தொடர்ந்து இத்திரைப்படத்தில் லோகேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இத்திரைப்படத்தில் 6 வில்லன்கள் என கூறப்படுகிறது. பிரித்விராஜ், சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
