CINEMA
பிரபல பாலிவுட் நடிகரை பேட்டி கண்ட DD… மகிழ்ச்சியில் டிவிட்
தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி பிரபல பாலிவுட் நடிகருடன் பேட்டி கண்ட புகைப்படங்களை மகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளராக திகழ்ந்து வந்தவர் டிடி என்ற திவ்ய தர்ஷினி. இவர் ஒரு கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் தனது சிறு வயதிலேயே “சுபயாத்ரா” என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
அதனை தொடர்ந்து “ஜூலி கணபதி”, “நள தமயந்தி”, “விசில்”, “சரோஜா”, “பவர் பாண்டி” “சர்வம் தாள மயம்” போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் “காஃபி வித் காதல்” திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
இவர் தொகுப்பாளராக தோன்றிய “காஃபி வித் டிடி”, “ஜோடி நம்பர் ஒன்” போன்ற நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமானவை. இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும் பல திரைப்படங்களில் நடிகைகளுக்கு பின்னணி குரலாகவும் ஒலித்துள்ளார்.
90’s kid-களின் மனதை கொள்ளை கொண்ட தொகுப்பாளினிகளில் இவரும் ஒருவர். இவர் தொகுப்பாளராக பங்கேற்ற ஷோக்கள் பலவும் வேற லெவலில் ரீச் ஆன ஷோக்கள். தற்போது அவ்வப்போது தான் சில நிகழ்ச்சிகளில் காட்சித் தருகிறார்.
இந்நிலையில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளிவர இருக்கும் “சம்ஷேரா” திரைப்படத்தை முன்னிட்டு ரன்பீர் கபூரை திவ்ய தர்ஷினி பேட்டி கண்டுள்ளார். அப்போது ரன்பீர் கபூருடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Well this happened today
RANBIR RAJKAPOOR 🖤
Hope this open more avenues for Tamil hosts in Bollywood #shamshera promotions Thnks for having me over @yrf
Can’t wait to show you the content I created with HIM👍 pic.twitter.com/9MxDyyPxP6— DD Neelakandan (@DhivyaDharshini) July 10, 2022
அதில் “இது இன்று நடந்தே விட்டது. தமிழ் தொகுப்பாளர்களுக்கு பாலிவுட்டில் பல கதவுகளை இது திறந்து விடும் என நம்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி” என தயாரிப்பு நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.