Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“குக்கும்பா தளபதி”… அனிருத் வெளியிட்ட தளபதி Birthday ஸ்பெஷல் வீடியோ..

CINEMA

“குக்கும்பா தளபதி”… அனிருத் வெளியிட்ட தளபதி Birthday ஸ்பெஷல் வீடியோ..

இசையமைப்பாளர் அனிருத் விஜய் பிறந்தநாளிற்கு ஒரு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று விஜய்யின் 48 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மாலை 06:01 மணிக்கு விஜய்யின் 66 ஆவது திரைப்படமான “வாரிசு” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது.

மேலும் “வாரிசு” திரைப்படத்தின் Second look மற்றும் Third look குறித்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது இன்று காலை 11:44 மணிக்கு Second look வெளிவர உள்ளது.

அதே போல் இன்று மாலை 05:02 மணிக்கு Third look வெளிவர உள்ளது. இந்த அப்டேட்டுகளால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர். இன்று விஜய் பிறந்த நாளில் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள் இந்த அப்டேட்டுகளால் வானத்திற்கு பூமிக்கும் குதித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் விஜய் பிறந்த நாளுக்கு ஒரு ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது “பீஸ்ட்” திரைப்படத்தில் இடம்பெற்ற “குக்கும்பா தளபதி” என்ற தீம் பாடலை Bjorn Surrao பாட அவரை சுற்றி இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கைகளில் கித்தாருடன் தென்படுகிறார்கள். இந்த வீடியோவை பகிர்ந்த அனிருத் “தளபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்” என பகிர்ந்துள்ளார்.

“பீஸ்ட்” திரைப்படத்தில் இடம்பெற்ற “குக்கும்பா தளபதி” என்ற தீம் பாடல் பரவலாக அனைவராலும் ரசிக்கப்பட்டது. இதனை Rap வடிவில் பாடியவர் Bjorn Surrao. இவர் பல Independent Album பாடல்களை இசையமைத்து பாடியுள்ளார்.

“மாஸ்டர்” திரைப்படத்தில் “மாஸ்டர் தி பிளாஸ்டர்” பாடலையும் இவர் தான் பாடியுள்ளார். இவர் “டாக்டர்” திரைப்படத்தில் நடித்திருப்பார். இவர் இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த “வேலைக்காரன்” திரைப்படத்தின் “வா வேலைக்காரா” பாடலையும் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Anirudh (@anirudhofficial)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top